சுவாசம்: 25

1.1K 36 7
                                    

                        ஷ்ருதியும் இந்துவும் அந்த போட்டியில் கலந்துக் கொள்ள பெயர் கொடுத்தனர்..வேலையாள் தேவியையே மதிய சமையல்  செய்யும்படி கூறினான் ஸ்ரீராம்..ஷ்ருதிக்கு காலையிலேயே  லன்ச் பேக் செய்து கொடுத்துவிட்டு.. ஸ்ரீராமிற்கான உணவை மதியம் டிரைவரிடம் கொடுத்தனுப்பிவிடுவார் .. மற்ற வேலைகளையும் அவரே முடித்துவிடுவார்.. ஷ்ருதி காலை உணவை முடித்துவிட்டு ஸ்ரீராமுடன் காரில் சென்று dance studioவில் இறங்கிக் கொள்வாள்..

மாலையில் ஸ்ரீராம் தானே சென்று அவளை அழைத்து வருவான்..
வீடு வந்ததும் ஓய்வெடுக்க சென்றுவிடுவாள்.. அவன் மீண்டும் அலுவலகம் சென்று விடுவான்.. இரவு  ஸ்ரீராம் வர தாமதமாகும் என்பதால்  அவனுக்கான உணவை தயார் செய்து ஹாட்பாக்ஸில் வைத்துவிட்டு தான் உணவருந்தி விட்டு சீக்கிரமே உறங்க போய் விடுவாள்..

தனியாக உண்ண பிடிக்காமல் சரியாக சாப்பிடாமலே தன்னறைக்கு ஸ்ரீராம்  சென்றுவிடுவான்.. 

இவ்வாறே சில நாட்கள் சென்றன..
அங்கு நடனம் பயில வரும் நிறைய பேர் அவர்களுக்கு நண்பர்களாயினர்..

ஷ்ருதி ஸ்ரீராமையும் ஒரு நாள் அவர்களிடம், 
" ஹீ இஸ் மிஸ்டர். ஸ்ரீராம். மை.. மை.. ஹஸ்பண்ட்.." என்று தயக்கத்துடன் அறிமுகம் செய்து வைத்தாள்..

"ஷ்ருதி.. உனக்கு கல்யாணம் ஆகிடுச்சா..? நம்பவே முடியல.. நான் கூட உன் அண்ணன்னு நெனச்சேன் சாரி.." என்றாள் ஒரு பெண்

அவள் திருமணமான அடையாளமாய் மெட்டியோ குங்குமமோ வைக்காததால் அவள் திருமதி என்பது வெளியில் தெரியவில்லை.. இப்போது சில மார்டன் பெண்கள் அவ்வாறு தான் இருக்கின்றனர் திருமணமானவர் என்று தானாக கூறினால்தான் தெரிகிறது..

தாலியையும் மெல்லிய செயினில் தான் கோர்த்திருந்தாள்.

"பரவாயில்லையே சார்.. யூ ஆர் ரியலி க்ரேட்..  உங்க வைஃப்போட ஆசைக்கு மதிப்பு கொடுத்து டான்ஸ் ஆட பர்மிஷன் கொடுத்திருக்கீங்களே.." என்றாள் இன்னொருத்தி.

என் சுவாசக் காற்றில் எல்லாம் உன் நினைவே..♡♡Where stories live. Discover now