சுவாசம் : 3

3.8K 130 53
                                    

"ஷ்ருதி அக்கா.. இங்க வாங்களேன்.." என்று சோகமாய் அழைத்தாள் அந்த நடனப்பள்ளியில் பயிலும் சிறுமி மாலினி

"என்னடா ஆச்சு..? ஏன் சோகமா இருக்க..?"என்று கனிவோடு விசாரித்தாள் ஷ்ருதி

ஷ்ருதியை கைப்பிடித்து அழைத்துச் சென்று,
"அக்கா.. அந்த புறா கூட்லயிருந்து அதோட குட்டி புறா கீழ விழுந்துடுச்சு பாவம் அது அம்மாவ இன்னும் காணோம்.. ரொம்ப நேரமா அழுகுதுக்கா.." என்று ஷ்ருதிக்கு காட்டினாள் மாலினி

ஷ்ருதி அந்த குட்டி புறாவின் அருகில் சென்று பார்த்தாள்..

இன்னும் இறக்கை முளைத்திடாத பிஞ்சு, தன்னை யாரும் காப்பாற்ற மாட்டார்களா என்ற ஏக்க பார்வையை வீசியது.. பயத்தில் தன் சின்ன குரலில் கத்தியது..
அதன் உடன் பிறந்த மற்ற இரு புறாக்களும் அதை பார்த்து கத்தியது..
அதை மென்மையாய் தன் கையில் ஏந்தினாள் ஷ்ருதி..
அது மலங்க மலங்க விழித்தது..  அதை பார்க்க பாவமாய் இருந்தது..
அதன் வேதனையில் துடித்த மாலினியை பார்க்கவும் பாவமாய் இருந்தது..

ஏணி எடுத்து வந்து அதன் மேலேறி பரணிலிருந்த கூட்டில் அந்த குட்டி புறாவை அதன் சகாக்களிடம் பத்திரமாக சேர்த்தாள்..
மாலினி உற்சாகத்தோடு கைத்தட்டி சிரித்தாள்..

ஷ்ருதி அவளை பார்த்துக் கொண்டே கீழே இறங்குகையில் ஒரு படி மாற்றி காலை வைத்துவிட தடுமாறி கீழே விழுந்தாள்..
கால் வலி உயிர் போனது..

மாலினி ஒன்றும் புரியாமல் திகைத்தாள்.. பிறகு ஓடிச்சென்று இந்துவையும் பத்மாவையும் அழைத்து வந்தாள்..
ஷ்ருதியால் பாதத்தை அசைக்கவும் முடியவில்லை..
உடனே அவளை அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்..

ஷ்ருதிக்கு காலில் சுளுக்கு ஏற்பட்டிருந்தது..
கட்டு போட்டு மருந்துகள் கொடுத்து ஒருவாரத்திற்கு காலை அசைக்கவே கூடாது என்றார் மருத்துவர்..

ஷ்ருதிக்கு பயங்கரமான திகைப்பு.. அழுகை பீறிட்டது..

"டாக்டர்.. நாளைக்கு மறுநாள் எனக்கு dance competition இருக்கு.."என்று குரல் தழுதழுக்க கூறினாள் ஷ்ருதி

"சாரிமா.. strain பண்ணா ரொம்ப அதிகமாய்டும்.. நீங்க ரெஸ்ட் எடுத்து தான் ஆகணும்.."

"ஆமா ஷ்ருதி.. முதல்ல உனக்கு கால் சரியாகட்டும் அப்பறம் பாத்துக்கலாம்.." என்றாள் இந்து

"இல்ல.. நான் கண்டிப்பா ஆடியே தீருவேன்.. எனக்கு ஒன்னும் இல்ல.. இப்ப கால் வலிக்கல நான் ஆடுறேன் ப்ளீஸ்.."என்று கெஞ்சினாள்

"சரி எந்திரிச்சு நட.." என்றார் பத்மா

ஷ்ருதி மனதை திடப்படுத்திக் கொண்டு சேரை விட்டு எழுந்தாள்.. காலை ஊன்றி  நிற்க முடியாமல் மீண்டும் அமர்ந்தாள்..
பின் மீண்டும் எழுந்து பல்லை கடித்தபடி வலியை தாங்கிக் கொண்டு நின்றாள்..

அவள் முகத்தில் வலியின் சாயல் அப்பட்டமாய் தெரிந்தது..

"ஷ்ருதி பேசாம உட்கார்..  நீ இருக்குற நிலைமைல நிக்க கூட முடியல.  ஆடப்போறாளாம்.." என்றார் பத்மா

" வேண்டாம் ஷ்ருதி.. நம்ம பேர் வாப்பஸ் வாங்கிட்றேன்.." என்றாள் இந்து

"இந்து.. ப்ளீஸ்.. வாப்பஸ் வாங்கினா ரொம்ப அசிங்கம்.. நாம போட்ட effortsக்கு எல்லாம் அர்த்தமே இல்லாம போய்டும்"

"ஷ்ருதி காம்ப்பட்டீஷன் அடிக்கடி நடக்கும்.. முதல்ல நீ கம்ப்ளீட்டா குணமாகனும்.. அப்பறம் அசத்திடலாம்.." என்றாள் இந்து

அவளுக்குமே பெரும் ஏமாற்றம் தான் ஆனால் தன்னை சமாதானம் செய்துக் கொண்டு தோழிக்கும் சமாதானம் கூறினாள்..

"நீ மட்டும் தனியா பார்ட்டிஸிப்பேட் பண்ணு.. "என்றாள் ஷ்ருதி

"இல்லல்ல.. அதலாம் வேண்டாம்.." என்றாள் இந்து

"என்னால உனக்கும் கலந்துக்க முடியாம போகுதே.. சாரி இந்து.. எல்லாம் என்னால தான்.."

"அதெல்லாம் ஒன்னுமில்ல.. நீ ஃபீல் பண்ணாத.. விடு.. இது தான் கடைசி வாய்ப்பா என்ன.. இன்னும் நிறைய ச்சான்ஸ் கிடைக்கும்.."

ஷ்ருதியை வீட்டில் கொண்டு போய் விட்டனர்..
ஷ்ருதியை வற்புறுத்தி ஓய்வெடுக்கும்படி கூறினர்..

ஷ்ருதியின் அன்னையும் அவளுக்கு ஆறுதல் கூறினார்..

ஷ்ருதியால் இந்த ஏமாற்றத்தை  ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. போட்டியில் கலந்துக் கொண்டு தோற்று போனால் கூட அவள் ஏற்றிருப்பாள் ஆனால் போட்டியில் இருந்து பின்வாங்கியதை எண்ணி எண்ணி அவள் மனம் ரணமானது..


என் சுவாசக் காற்றில் எல்லாம் உன் நினைவே..♡♡Where stories live. Discover now