சுவாசம்: 4

3.7K 129 40
                                    

                         காலையில் ஷ்ருதியின் அன்னை வந்து எழுப்பிய போதுதான் அவள் தரையிலேயே உறங்கியதை உணர்ந்தாள்..
எவ்வளவு நேரம் அழுதாளோ அவள் கண்கள் சிவந்து.. இமைகள் வீங்கியிருந்தது..

அவளது அன்னை பதறினார்..
"ஷ்ருதி என்னம்மா இது.. சின்ன குழந்தை மாதிரி.." என்று வாஞ்சையோடு அணைத்துக் கொண்டார்

"ஒன்னுமில்லம்மா.." என்றாள்

"ஷ்ருதி.. விடும்மா.. அடுத்த தடவ பாத்துக்கலாம்.. அதான் இன்னும் மூணு மாசத்துல மறுபடியும் காம்ப்பட்டீஷன் நடக்க போகுதுல.." என்று தேற்றினார்

"இருந்தாலும் மனசு கேக்கலமா.. " என்று மீண்டும் அழுதாள்

அவள் தலையை வருடி, "சரியாயிடும்.. சரியாயிடும்.. brush பண்ணிட்டு வா.. காஃபி போட்டு தரேன்.. " என்று கூறிச் சென்றார்

கால் சரியான பிறகும் அவள் வீட்டிலேயே அடைந்துக் கிடந்தாள்..
அவளது தோழிகள் இந்துவும் ஸ்ரீமதியும் அவளைக் காண வந்தனர்..

இவர்கள் மூவரும் கல்லூரி தோழிகள்..
ஷ்ருதியும் இந்துவும் சிறு வயதிலிருந்தே தனித்தனியே பரதம் பயின்றனர்..

BCA முடித்தபின் இரண்டு ஆண்டுகளாக பல போட்டிகளில் ஜோடியாய் பங்கேற்று வருகின்றனர்..

ஷ்ருதிக்கு நடனமே சுவாசம்.. அனைத்து நடன வகைகளையும் கற்க வேண்டும் என்பது பல வருட ஆசை.. பரத கலையை முழுவதுமாக கற்றுக் கொண்டு வெளிநாடுகளிலும் புராணக் கதைகளை நடனத்தின் மூலம் அரங்கேற்ற வேண்டும் விருதுகள் பெற வேண்டும்  என்று ஒரே இலட்சியம்..

"ஹாய் ஷ்ருதி.. எப்டி இருக்க..?" என்றனர்

"நல்லாயிருக்கேன்.. நீங்க எப்டியிருக்கீங்க..?"என்றாள் ஷ்ருதி

"ம்.. ஃபைன்.. ஏன் ஷ்ருதி நடந்தத நெனச்சு ஃபீல் பண்ணிட்டே இருக்க..? ஏன் நீ நடனாலயா பக்கமே வரதில்ல..?" என்றாள் இந்து

"சும்மா தான்.. " என்றாள் ஸ்வரமற்று

"ஏய்.. நீ டான்ஸ் ஆடாம இப்டி வீட்டுக்குள்ளயே இருந்து நாங்க பாத்ததே இல்ல.. சரி கிளம்பு.. எங்க வீட்டுக்காவது போகலாம்.." என்று அழைத்து சென்றாள் ஸ்ரீமதி

என் சுவாசக் காற்றில் எல்லாம் உன் நினைவே..♡♡Where stories live. Discover now