சுவாசம்: 24

1.1K 38 6
                                    

அன்று விடுமுறை நாள்.. ஸ்ரீராம் தன் லாப்டாப்புடன் சோஃபாவில் அமர்ந்திருந்தான்..

ஷ்ருதி கிட்ச்சனில் காலை உணவு தயாரித்துவிட்டு ஹாலில் வந்தமர்ந்தாள்..

"ப்ரேக்ஃபாஸ்ட் ரெடி.. சாப்டுறீங்களா..?" என்றாள்

'ஹோட்டல்ல சர்வர் கேட்குற மாதிரியே இருக்கு.. இது என்னடா உனக்கு வந்த சோதனை' என்று எண்ணினான் ஸ்ரீராம்

" ஓக்கே.. " என்றான் ஒரே வார்த்தையில்

இருவரும் அமைதியாக உணவருந்தினர்..
ஷ்ருதி  தன் தட்டையே மிக  கவனமாக பார்த்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்..

ஸ்ரீராம்க்கு அவளிடம் எதாவது பேச வேண்டும் போல் தோன்றியது..

'அவளா எதுவும் பேசமாட்டா.. நாமலே எதாவது ஆரம்பிப்போம்.. என்ன பேசலாம்..?அவள பத்தியே பேசுவோம்..' என்று எண்ணியவனாய்

"ஷ்ருதி.. பரதம் காம்ப்பட்டீஷன்ஸ் பெங்களூர்லயும் நடக்கும் நீ விரும்பினா பார்ட்டிஸிப்பேட் பண்ணலாமே..  " என்று பேச்சை ஆரம்பித்தான்

அவனை ஆச்சர்யத்துடன் பார்த்தாள் ஷ்ருதி..
"ஆனா  நான் டான்ஸ் பண்றதுக்கு உங்க அப்பா, அம்மா சம்மதிப்பாங்களா..?" என்றாள் தயக்கமாக

"ஏன்..?  அதெல்லாம் ஒன்னும் சொல்லமாட்டாங்க.. உனக்கு இஷ்டம்னா சொல்லு.."

"ம்.. எனக்கு ரொம்ப இஷ்டம்.."என்றாள் உற்சாகமாக

'ஹும்.. டான்ஸ் மேல இவ்ளோ லவ்.. ஆனா புருஷன் மேல கொஞ்சம் கூட இல்ல.. புருஷனா கூட ஏத்துக்கல.. உங்க அப்பா அம்மாவாம்.. அத்தை மாமான்னு கூட சொல்ல தோணல..ஹூம்..' என்று தனக்குள் புலம்பினான் , பின்

"ஓக்கே.. காம்ப்பட்டீஷன் எப்போனு.. " என்று ஸ்ரீராம் தொடங்க

"2 daysல நேம் குடுக்கனும்.. 15 நாள் கழிச்சு காம்ப்பட்டீஷன்.. " என்றாள் படபடவென்று

"தெரியுமா..?!" என்றான் அதிர்ச்சியாக

"ம்.. நெட்ல சர்ச் பண்ணேன்.. "

என் சுவாசக் காற்றில் எல்லாம் உன் நினைவே..♡♡Tahanan ng mga kuwento. Tumuklas ngayon