வீட்டிற்கு வந்து ஹாலிலேயே அமர்ந்துவிட்டாள்..
நடந்தவற்றை எல்லாம் மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்த்துக் கொண்டே இருந்தாள்..அவள் வந்த பத்து நிமிடத்திற்கெல்லாம்
ஸ்ரீராம் வந்துவிட்டான்.."ஷ்ருதி.. வா ஹாஸ்ப்பிட்டல் போகலாம்.."
"இல்ல வேணாம் டாப்லட் போட்டேன்.." என்றாள் தலை குனிந்தவாறே
அவன் முகத்தை பார்த்தால் அழுதுவிடுவோமோ என்று அஞ்சினாள்..
சட்டென்று எழுந்து மாடிக்கு சென்று தாழிட்டுக் கொண்டாள்..
'இவளுக்கு என்னாச்சு..? காலைல நல்லாதானே இருந்தா..!!' என்று அவன் புரியாமல் விழித்தான்..
ஆனால் அவளது இந்த மனநிலைக்கு தவறான புரிதல் என்பதை அவன் எப்படி அறிவான்..
ஃபோனில் மைக்கேலிடம் 'என்னடா ஃப்ரியா(freeya) என்று கேட்டதை 'என்னடா ப்ரியா (priya)' என்று கூறியதாக தவறாக எண்ணிக் கொண்டது ஷ்ருதியின் தவறா..? அல்லது அவ்வாறு எண்ணும்படி சந்தேகத்தை தோற்றுவித்த ப்ரியாவினால் வந்த வினையா..?
தொழில் சம்பந்தமான சிவில் லாயர் பற்றி அவன் பேசியதை விவாகரத்து பெறுவதற்காக லாயரிடம் பேசப்போவதாக எண்ணியது ஷ்ருதியின் தவறா..? அல்லது அவ்வாறு எண்ணும்படி சந்தேக தீயை மூட்டிவிட்ட ப்ரியாவினால் வந்த வினையா..?
மறுநாள் வழக்கம் போல அலுவலகம் கிளம்பினாள் ஷ்ருதி..
"ஷ்ருதி.. உடம்பு சரியில்லனா ரெஸ்ட் எடுத்துக்கோ.. ஸ்ட்ரெய்ன் பண்ணிக்காத.."என்றான் ஸ்ரீராம்
"இல்ல.. சரியாகிடுச்சு.."
"ஓக்கே.. "
ஷ்ருதியின் முகம் வாட்டத்துடனே காணப்பட்டது..
ஆனால் அவளிடம் இருந்து எந்த பதிலும் வராது என்றறிந்து ஸ்ரீராம் எதுவும் கேட்கவில்லை.. அவளது போக்கிலேயே விட்டுவிட்டான்..
மீண்டும் ஷ்ருதியிடம் வந்தாள் ப்ரியா..
"கீர்த்தி கெஸ் வாட்.. ? நானும் ராமும் இன்னிக்கு நைட் டின்னர் போறோம்.."
YOU ARE READING
என் சுவாசக் காற்றில் எல்லாம் உன் நினைவே..♡♡
General FictionCompleted.. Thank you so much friends.. thanks for the support.. Thank you all for keeping my story always in #1 position in general fiction..