சுவாசம் : 11

2.8K 112 33
                                    

                      தன் அன்னையும் பாட்டியும் அந்த பெண்ணை சென்று பார்த்தே தீர வேண்டும் என்று விரும்பிய ஒரே காரணத்திற்காக தன் மனதை கல்லாக்கிக் கொண்டு சென்னைக்கு அவர்களுடன் சென்றான் ஸ்ரீராம்..

பெண்ணை நிமிர்ந்து பார்க்க சொல்லியதும் கடனே என்று விழியை மட்டும் உயர்த்தி பார்த்தவன்..

சட்டென்று மீண்டும் தன் முகத்தை உயர்த்தி பார்த்தான்..
அன்று பெங்களூர் mallலில் கண்ட அந்த பெண்ணை போல் தெரிந்தது..
'ச்ச..என்ன இது.. யாரப் பாத்தாலும் அந்த பொண்ணு மாதிரியே இருக்கு..!!' என்று கண்ணை அழுத்தமாக மூடித் திறந்து மீண்டும் பார்த்தான்..

மீண்டும் அன்று கண்ட அந்த தேவதையின் முகமே தெரிந்தது..
' எவ்வளவு முயற்சி செஞ்சாலும் அவ தான் என் கண் முன்னாடி வந்து நிக்குறா.. ' என்று அவனுக்கு கோபம் வந்தது..

'அவள் தான் பெங்களூரில் இருக்கிறாளே.. பின்னே இங்கு எப்படி வர முடியும்.. நாம் யாரை மனதில் அதிகமாக நினைத்துக் கொண்டிருக்கிறோமோ யாரை பார்த்தாலும் அவர்கள் முகம் போல பிரம்மை ஏற்படுவது உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.. இன்று அந்த வியாதி என்னையும் தொற்றிக் கொண்டது..'

'ஒருவேளை இந்த பெண் அவளைப் போல சாயல் கொண்டிருக்கிறாளோ..? அந்த பெண்ணை நேரில் பார்த்து சில நாட்கள் ஆனதால் முகம் சரியாக நினைவில்லையோ..' இவ்வாறு பல கேள்விகள் நொடி பொழுதில் அவன் மனதில் தோன்றியது..

புருவ மத்தியில் முடிச்சுவிழ குழப்பத்துடன் அவளை பார்த்துக் கொண்டிருந்தான்..

"ஸ்ரீராம்.. காஃபி எடுத்துக்கோப்பா.. பொண்ணு எவ்ளோ நேரம் தான் இப்டி நிக்கறது..?" என்று காதோரம் தன் பாட்டி கிசுகிசுக்க ஸ்ரீராம் சுயநிலைக்கு வந்து.. காஃபி கப்பை எடுத்துக் கொண்டான்..

எல்லோருக்கும் காஃபி கொடுத்துவிட்டு ஷ்ருதி உள்ளே சென்றுவிட்டாள்..

ஒன்று மட்டும் ஸ்ரீராமிற்கு நன்றாய் புரிந்தது.. அந்த பெண்ணின் மேல் அவனுக்கு ஏற்பட்டது வெறும் ஈர்ப்பல்ல உண்மையான காதல் என்று..

என் சுவாசக் காற்றில் எல்லாம் உன் நினைவே..♡♡Where stories live. Discover now