ஷ்ருதி, ஸ்ரீராமின் callலை அட்டென்ட் செய்யாததால் அவன் சென்னைக்கு செல்லாமல் இருந்திடலாம் என்றெண்ணினான்.. ஆனால் ஷ்ருதி முதன்முதலில் கேட்டதை செய்ய முடியாமல் போகிறதே என்று வருந்தினான்..
'நாளைக்கு போகலாம்னா ஆஃபிஸ்ல ஆடிட்டிங் மீட் இருக்கு அத தள்ளி வைக்க முடியாது.. நாளக்கழிச்சு புடவை எடுக்க போறோமே அப்டியே பாத்து பேசிடலாமா.. ஆனா தனியா பேசனும் யார்கிட்டயும் சொல்லாதிங்கனு வேற சொன்னா.. அப்டி என்ன பேசப்போறா.?' என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே ஷ்ருதியிடம் இருந்து call வந்தது..
"ஹலோ.. நான் ஷ்ருதி பேசறேன்.. நீங்க call பண்ணப்போ ஒரு வேலையா இருந்தேன் அதான் அட்டன்ட் பண்ண முடியல.."
"ஆங்.. it's ok.. ஷ்ருதி.."
"Call பண்ணியிருந்தீங்க.."
"ஆமா.. அது வந்து.."
'எப்டி சொல்றதுன்னு தெரியலையே..' என்று தயங்கினான்
"வரலன்னு மட்டும் சொல்லிட மாட்டிங்கள்ல ப்ளீஸ்.. அப்டி மட்டும் சொல்லிடாதிங்க.." என்றாள் ஷ்ருதி
அவளது குரலில் இருந்த எதுவோ அவன் மனதை பிசைய உடனே தன் முடிவை மாற்றினான்..
"இல்ல ஷ்ருதி.. ஆனா கொஞ்சம் லேட்டாகும் அத சொல்ல தான் call பண்ணேன்.. " என்று பேசிக் கொண்டே காரில் ஏறி சென்னை நோக்கி புறப்பட்டான்
"ஓ.. அப்டியா.. பரவாயில்ல ஆனா ஆறு மணிக்குள்ள வந்துடுங்க.. ஆறு மணிக்கு மேல நான் வீட்ல இருக்கனும்.. அம்மா ஸ்ட்ரிக்ட்டா சொல்லியிருக்காங்க.."
"ஓக்கே ஷ்ருதி.. கண்டிப்பா வந்துட்றேன்..5 மணி ஆகும் நான் வர.."
"ஓக்கே.. வெய்ட் பண்றேன்.."
"ட்ரைவிங்ல இருக்கேன் வந்துட்டு call பண்றேன்.." என்று கூறி ஃபோனை வைத்துவிட்டு வண்டியின் வேகத்தை அதிகரித்தான்
"ஷ்ருதி.. என்னால முடிஞ்ச வரை உன்னோட ஆசைகளையெல்லாம் நிறைவேற்றுவேன்.." என்று அவளை காண ஆசையுடன் சென்றான்
YOU ARE READING
என் சுவாசக் காற்றில் எல்லாம் உன் நினைவே..♡♡
General FictionCompleted.. Thank you so much friends.. thanks for the support.. Thank you all for keeping my story always in #1 position in general fiction..