சுவாசம் : 35

665 18 0
                                    

                           ப்ரியா, ப்ராஜெக்ட் முடிந்து
பெங்களூரு திரும்பி வந்தாள்..
ஸ்ரீராம்க்கு ஷ்ருதி என்ற பெண்ணுடன் திருமணம் ஆனது தெரியவந்து மிகவும் அதிர்ந்தாள்..

புதிதாக வேலையில் சேர்ந்த கீர்த்தி அனைவரிடமும் அன்பாக பழகுவதை கண்டாள்.. அனைத்து அலுவலர்களும் அவளுடன் ஃப்ரெண்ட்லியாக பழகுவதையும் கண்டாள்..

அவர்களை விட ஒருபடி உயர்ந்த நிலையில் உள்ளதால் அவளுக்கு எப்போதும் கர்வம் உண்டு..
அதனால் அவள் யாரிடமும் நெருங்கிப் பழகாமல்  தனித்தே இருப்பாள்..

அவளைக் கண்டால் மற்றவர்கள் அவளுக்கு மரியாதை கொடுத்து ஒதுங்குவதில் அவளுக்கு பெருமிதம் இருக்கும்..

கீர்த்தியிடம் சகஜமாக பழகும் பிறரை கண்டு உள்ளூர புகைந்தாள்..

ஆனால் அதை வெளிக்காட்டாமல் கீர்த்தியுடன் அன்பாகவே பழகினாள்..

கீர்த்தியுடன் மட்டும் பழகும் ப்ரியாவை கண்டு மற்றவர்கள் ஆச்சரியப்பட்டனர்..

நாட்கள் இரண்டு சென்றன..

'பெண்களை நிமிர்ந்தும் பார்த்திடா உன் இனிய கண்ணியம் பிடிக்குதே' என்ற பாடலுடன் ஷ்ருதியின் செல் ஒலித்தது..

அந்த பாடல் ஸ்ரீராமை நினைவுப்படுத்த புன்னகையுடன் ஃபோனை எடுத்து உற்சாகத்துடன் "ஹலோ.." என்றாள்

அவளது அன்னை பேசினார்..

மகளின் குரலில் இருந்தே அவள் இன்பமாக வாழ்கிறாள் என்று எண்ணி பூரித்தார்..
சௌந்தர்யாவிற்கு திருமணம் பேசி முடித்திருப்பதாக தெரிவித்தார்..

"நிச்சயத்துக்கு அழைக்க நேர்ல வரணும் மாப்பிள்ளை எப்போ ஃப்ரீன்னு உங்க அப்பா கேட்டாங்க மா.."

"கேட்டு சொல்றேன் மா.. " என்றாள்

பிறகு பொதுவாக பேசிவிட்டு வைத்தார்..

ஷ்ருதிக்கு ஸ்ரீராமை பார்க்க வேண்டும் போல் இருந்தது..

என் சுவாசக் காற்றில் எல்லாம் உன் நினைவே..♡♡Where stories live. Discover now