"ஹாய் ஆன்ட்டி.. " என்றபடி ஸ்ரீராம் வீட்டிற்குள் நுழைந்தான் அவனது நண்பன் மைக்கேல்
"வாப்பா.. மைக்கேல்.." என்று வரவேற்றார் கீத்தா"ராம் எங்கே ஆன்ட்டி..?"
"மாடியில இருக்கான்ப்பா.."
"Ok ஆன்ட்டி நான் போய் பாக்றேன்.." என்று மாடிக்கு சென்றான்
ஸ்ரீராம் தன் லேப்டாப்புடன் கொஞ்சிக் கொண்டு இருந்தான்..
"ஹாய்டா மச்சான் என்ன பண்ற..?" என்று ஸ்ரீராமிடம் கேட்டபடி அறையினுள் சென்றான் மைக்
"வாடா.. புது ப்ராஜக்ட் கமிட்டாகியிருக்கு.. அது விஷயமா பாத்துட்டு இருக்கேன்.. என்ன ரொம்ப நாளா இந்த பக்கமே காணோம்.."
"என்னடா நீ..? ஆஃபிஸ் போனா லேட் நைட் தான் திரும்பற.. சன்டே தான் வீட்ல இருக்க.. அப்பயும் ஆஃபிஸ் வொர்க் தானா..?"
"வேற என்ன செய்ய சொல்றடா.. ஒவ்வொரு ப்ராஜக்ட்டும் புதுப்புது விதமா செய்யனும் அப்ப தான் நிறைய ப்ராஜக்ட்ஸ் கிடைக்கும்.."
"அதுக்குனு இப்டியா..? லைஃப்ல எந்தவித என்ஜாய்மென்ட்டும் இல்லாம machine மாதிரி இருக்கிறது..?"
"டேய்.. யங் ஏஜ்ல நல்லா உழைச்சாதான் ரிட்டயர்ட் லைஃப்ல நிம்மதியா இருக்கலாம்.. " என்றான்
மைக்கேல் ஸ்ரீராமின் அருகில் சென்று,
"பல்லு போன வயசுல எப்டிடா பக்கோடா சாப்பிடுவ..?!" என்று அமைதியான குரலில் சீரியசாக கேட்டான்"டேய்.. நீ இருக்கியே.. "என்று சிரித்தான் ஸ்ரீராம்
"பின்ன என்னடா.. அந்தந்த வயசுல தான் அந்தந்த மாதிரி என்ஜாய் பண்ணனும்.. வா வெளிய போலாம் " என்றான் மைக்
"சரி வா.. " என்று கிளம்பினான் ஸ்ரீராம்
காரை ஸ்ரீராமின் கை ஆள மைக்கேல் அருகில் அமர்ந்திருந்தான்..
"ராம்.. ஏண்டா கல்யாணமே வேணாங்குற.. துறவியா போற ஐடியா எதாவது இருக்கா என்ன..?"என்றான் மைக்
"கல்யாணமே வேணாம்னு சொல்லல.. மனசுக்கு பிடிச்ச மாதிரி ஒரு பொண்ண இன்னும் பாக்கலடா.. அவள பாத்தவுடனே அவ என் மனசுல பதியனும்.. அவ தான் நமக்குனு தோணனும்.. "
"ம்.. அப்பறம்.."
"எல்லார்கிட்டயும் அன்பா பழகுறவளா இருக்கனும்.. எங்க அம்மாவுக்கும் பிடிக்கனும்.. எங்க குடும்பத்துக்கு ஏற்ற மருமகளா இருக்கனும்.. அப்டி ஒரு பொண்ண பாத்தா உடனே கல்யாணம் தான்.."
"அதுக்கு மொதல்ல இந்த மாதிரி நாலு இடத்துக்கு வரணும்.. பொண்ணுங்கள பாக்கனும், பழகனும் அப்ப தான் நீ சொல்றதெல்லாம் நடக்கும்.. இப்டியே ஆஃபிஸ் விட்டா வீடு.. வீடு விட்டா ஆஃபிஸ்னு இருந்தா அந்த பொண்ணு என்ன உன் முன்னாடி வந்து நிக்குமா..? நீ தான் ட்ரை பண்ணனும்.. "
"ம்.. பண்ணுவோம் பண்ணுவோம்.."
"இது சரி வராது.. நீ ஃபர்ஸ்ட் கார நிறுத்து.."
"எதுக்குடா..?"
"கீழ இறங்கு.."
"ஏண்டா..?"
"மொதல்ல இப்டி கேள்வி கேட்குறத நிறுத்துறியா..?"
"Ok.. ok.."
காரை பார்க் செய்து விட்டு இருவரும் இறங்கி சாலையில் நடந்து சென்றனர்..
"ஹே.. மச்சான்.. அந்த பொண்ண பாரேன்.. பிடிச்சிருக்கா..?"
என்று அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறி ஒரு பெண்ணை காட்டினான்"இந்த பொண்ணு..?அந்த ஜீன்ஸ் போட்ட பொண்ணு..? இந்த சாரி போட்ட பொண்ணு.. " என்று அந்த சாலையில் சென்ற ஒவ்வொரு பெண்ணாக காண்பித்தான் மைக்..
"டேய்.. என்னடா இது.. எல்லா பொண்ணையும் அப்டி பாக்கக்கூடாதுடா.. தப்புடா.. " என்றான் ஸ்ரீராம்
"தப்பான கண்ணோட்டத்துல பாத்தா தான் தப்பு.. டேய் ராம் அந்த திரும்பி நிக்குற பொண்ண பாரேன்.. ஃப்ரீ ஹேர்.. சல்வார்.. அந்த பொண்ணோட கர்லி ஹேர்ர பாத்தா பொண்ணு ரொம்ப அழகா இருக்கும்னு நினைக்கிறேன்.." என்றான் மைக் சற்று தொலைவில் நின்ற ஒரு பெண்ணை காண்பித்து
மைக் சுட்டி காட்டிய திசையில் பார்த்தான் ஸ்ரீராம்..
"ஹே.. நம்ம பக்கம் திரும்புதுடா.." மைக்கேல் ஆர்வமானான்
மைக்கேல் வர்ணித்ததில் கவரப்பட்டு.. ஸ்ரீராமின் விழிகள் அவள் முகத்தை காண பரபரத்தது..
CZYTASZ
என் சுவாசக் காற்றில் எல்லாம் உன் நினைவே..♡♡
General FictionCompleted.. Thank you so much friends.. thanks for the support.. Thank you all for keeping my story always in #1 position in general fiction..