சுவாசம் : 8

3K 108 37
                                    

                            சில நாட்கள் நகர்ந்தன..
      ஸ்ரீராம் பெங்களூர் முழுவதும்  அவளைத் தேடி அலைந்தான்..
நம் கதையின் நாயகன் கண்களுக்கு அந்த பெண்ணின் தரிசனம் கிடைக்கவில்லை..

மைக்கேல் ஸ்ரீராமிற்கு ஃபோன் செய்தான்..

"ராம்.. எங்க இருக்க..?"

"ஆஃபிஸ்ல இருக்கேன்டா.. ஒரு முக்கியமான வேலை.. அப்றம் பேசறேன்..பை" என்று கூறி ஃபோனை கட் செய்தான்

மைக்கேல் ஸ்ரீராமை காண ஆஃபிஸ் சென்றான்..

"உங்க Bossஸ்ஸ பாக்கனும்.. " என்றான் வரவேற்பு பெண்ணிடம்

"Sir  boss இன்னிக்கு  ஆஃபிஸ் வரல  sir.."

"ஓ.. ஓக்கே.. தாங்க்ஸ்.."

'எங்கே போயிருப்பான்.. ? ஆஃபிஸ்ல இருக்கேன்னு என்கிட்ட எதுக்கு சொன்னான்..? எங்கயோ இடிக்குதே..'

ஸ்ரீராம் வீட்டு எண்ணுக்கு call செய்தான்..

"ஹலோ ஆன்ட்டி.. ஸ்ரீராம் வீட்ல இருக்கானா..?"

"இருக்கான்ப்பா.. இப்ப தான் ஆஃபிஸ்ல இருந்து வந்தான்.."

"சரிங்க ஆன்ட்டி நான் வரேன்.."என்று கூறி ஸ்ரீராம் வீட்டிற்கு சென்றான்

"என்ன ராம் ஆஃபிஸ்ல ரொம்ப பிஸியோ..?" என்றான் மைக்கேல்

"ஆமான்டா.. ஏகப்பட்ட கமிட்மெண்ட்ஸ்.. இப்ப தான் வீட்டுக்கு வர்றேன்.." என்று அலுப்புடன்  கூறினான் ஸ்ரீராம்

"நான் உன் ஆஃபிஸ் போய்ட்டு தான் வரேன் தம்பி..  எங்க போன..? கேர்ள் ஃப்ரண்ட மீட் பண்ண போயிருப்பனு நினச்சா அதுக்கும் வாய்ப்பில்ல.."

அவனே ஒரு முடிவுக்கு வரட்டும் என்று ஸ்ரீராம் அமைதியாக இருந்தான்.. 

அவன் எங்கு சென்றிருப்பான் என்ற ஆராய்ச்சியை கைவிட்டு தான் வந்த காரணத்தை கூறினான் மைக்கேல்

"டேய் ப்ராப்பர்ட்டி விஷயமா லாயர்ர இன்னிக்கே மீட் பண்ணணும்னு சொன்னியேடா.. " என்று ஸ்ரீராம்க்கு நினைவூட்டினான் மைக்கேல்

"ஆமான்டா மறந்தே போய்ட்டேன்.. க்ளையன்ட் ஒருத்தர் ப்ராப்பர்ட்டி வாங்குனதுல ஒரு சின்ன சிக்கல்.. அது விஷயமா தான் லாயர் contact கேட்டேன்.. சாரிடா உன் டைம் வேஸ்ட் பண்ணிட்டேன்.. நான் போய் லாயர மீட் பண்ணிக்கிறேன்.."

"எங்க ரெஸ்ட்டாரண்ட்ல  தான்டா அவர வெய்ட் பண்ண சொல்லிட்டு வந்திருக்கேன்.. அவர் ரெண்டு மணி நேரம் ஃப்ரீ தானாம்.. அதான் அவசரமா உன்ன பாக்க வந்தேன்.."

ஸ்ரீராமின் அன்னை காஃபி கப்புகளுடன் வந்தார்..
"மைக்கேல்.. உன் வைஃப் ஜூலியையும் பையன் டேவிட்டயும் ஒரு நாள் கூட்டிட்டு வாப்பா.. துறு துறுன்னு இருந்தான் உன் பையன்.. அவன பாக்க ஆசையா இருக்கு.." என்றார் கீத்தா

"ஆமா ஆன்ட்டி.. சரியான வாலு.. கூட்டிட்டு வரேன் ஆன்ட்டி.. " என்றான்

ஸ்ரீராம் முகம் சோர்ந்திருந்ததை கீத்தா கவனித்தார்..

'என்னாச்சு இந்த பையனுக்கு.. இப்டி இருந்ததே இல்லையே..' என்று மனதிற்குள் வருந்தினார்

'நான் ஏன் இப்டி அந்த பொண்ணு நினப்புலயே இருக்கேன்.. என் பொறுப்புகள நான் மறந்துட்டு இப்டி பொறுப்பில்லாம நடந்திருக்கிறது சரியில்ல..' என்று மானசீகமாய் தன் தலையில் குட்டிக் கொண்டு,
" வா மச்சான்.. போகலாம்.." என்று மைக்கேலுடன் சென்றான் ஸ்ரீராம்

என் சுவாசக் காற்றில் எல்லாம் உன் நினைவே..♡♡Where stories live. Discover now