சுவாசம் : 29

539 21 2
                                    

ஒரு மழை நாள்..
                    மாலையில் வீடு திரும்பிக்கொண்டிருந்தான் ஸ்ரீராம்..
லேசாக மழைத் தூரிக் கொண்டிருந்தது..
சாலையின் இருபுறமும் இருந்த மரங்களின் இலைகளில் இருந்து நீர் சொட்டு சொட்டாக வடிந்து கொண்டிருந்தது..
கார் விண்டோவை திறந்து வைத்து மழை துளிகளை முகத்தில் வாங்கி ரசித்துவிட்டு விண்டோவை மூடினான்.. மூடிய திரையில்  மழை நீர் ஓவியம் வரைந்தது..

எம்.பி.3 ப்ளேயரில் இதமான மெலோடி பாடலை பாடவிட்டு அந்த சூழலில் மனம் லயித்து போனான்..

அந்த பாடல் ஷ்ருதியின் நினைவை மனதில் சாரலாய் வீசியது..

இந்த இனிமையான‌ தருணத்தை அவளோடு சேர்ந்து அனுபவிக்க ஏங்கினான்..

இந்த எண்ணத்திலேயே வீடு வந்து சேர்ந்தான்..

வீட்டினுள் ஷ்ருதியை காணவில்லை..
'மொட்டை மாடியில் இருப்பாள்.. ட்ரெஸ் ச்சேன்ஞ் செய்துவிட்டு போய் பார்ப்போம்' என்று தன்னறைக்கு சென்றான்.

வெள்ளை நிற பைஜாமா முழுக்கை வெள்ளை  குர்தா அணிந்திருந்தான்..‌

மொட்டை மாடிக்கு சென்றான்..
அரையிருள் சூழ்ந்திருந்தது.. ஸ்ருதியை தேடினான்..

பால் நிலாவை கரு மேகம் படர்ந்திருப்பதை போல ஷ்ருதியின் மேனியை கருநீல புடவை தழுவியிருந்தது..

கைகளை விரித்து கண்களை மூடி மழையில் நனைந்துக் கொண்டிருந்தாள்..

மழைத் துளிகள் அவள் மேனியில் பட்டு முத்துக்களாய் தெரித்தன..

கண்கள் தேடிய திசையில் உயிரோவியமாய் நின்றுக்கொண்டிருந்த ஷ்ருதியின் எழில் ஸ்ரீராம் மனதை கவர்ந்தது..

அவனது பார்வை மெல்ல மெல்ல அவளருகே சென்றது..

இதழ் விரித்த ரோஜாப்பூவில் பனித்துளி  போல இருந்தது ஷ்ருதியின் இதழில் நின்ற மழைத்துளி..

என் சுவாசக் காற்றில் எல்லாம் உன் நினைவே..♡♡Where stories live. Discover now