சுவாசம்: 19

2.6K 115 47
                                    

                        திருமண நாளின் காலை..
மிதமான வெயிலும் இதமான தென்றலும் இணைந்து பரவசமூட்டியது..

ஸ்ரீராம் ஹோட்டல் ரூம் பால்கனியில் நின்று இயற்கையை அனுபவித்துக் கொண்டிருந்தான்..

ஷ்ருதியை தன் வாழ்வில் வரவேற்பதற்காகத்தான் இத்தனை இனிமை என்று தன் மனதிற்குள் எண்ணிக் கொண்டான்..

ஆனாலும்.. மனது லேசாய் கனத்தது..

"மச்சான் டைமாச்சு.. வா.. ரெடியாகு.." என்றழைத்தான் மைக்கேல்

சிறிது நேரத்திற்கெல்லாம் மாப்பிள்ளை வீட்டார் தயாராகி மண்டபத்துக்கு சென்றனர் ..

ஷ்ருதியின் தந்தை மணமகனின் கழுத்தில் மாலை அணிவித்து  வரவேற்றார்..

ஸ்ரீராம், பட்டு வேஷ்ட்டி சட்டையில் ஆண்களுக்கே உரிய கம்பீரத்துடன் மணமேடையில் அமர்ந்திருந்தான்..

ஷ்ருதி தயாராகிக் கொண்டிருந்தாள்.. அவளது தோழிகள் பட்டாளம் அவளை  கேலி செய்துக் கொண்டிருந்தனர்..

  அலங்காரம் முடித்து மணமகளை மேடைக்கு அழைத்து வந்தனர்..

ஸ்ரீராம் ஷ்ருதியை நிமிர்ந்து பார்த்தான்..

"இந்திரையோ..!
இவள் சுந்தரியோ..?
தேவ ரம்பைய மோகினியோ..?!
மனம் முந்தியதோ..?
விழி முந்தியதோ..?
கரம் முந்தியதோ எனவே..
உயர் சந்திர சூடர் குறும்பல ஈசர்
சங்கனி வீதியிலே..
மணி பைந்தொடி நாரி..
வசந்த ஒய்யாரி
பொன் பந்தல் கொண்டாடினளே..
மனம் முந்தியதோ
விழி முந்தியதோ
கரம் முந்தியதோ எனவே.."

என் சுவாசக் காற்றில் எல்லாம் உன் நினைவே..♡♡Where stories live. Discover now