சுவாசம் : 27

2.1K 45 30
                                    

                          கீத்தாவும் ஷ்ருதியும்   அன்று காலை உணவை தயாரித்துக் கொண்டிருந்தனர்.. 

"மாமியாரும் மருமகளும் என்ன டிஃபன் பண்றிங்க இவ்ளோ நேரமா..?" என்றபடி  வந்தார் ஜானகி

"அடை அவியல் பண்றோம் பாட்டிமா.. அத்தை சொல்ல சொல்ல நான் செய்றேன்.."

"ம்.. வாசனையே ரொம்ப பிரமாதமா இருக்கே.. " என்று வாசனை பிடிப்பது போல மூச்சை இழுத்தார்

"இனிமே தினம் புதுப் புது டிஷ் கத்துக்க போறேன் ஓக்கேவா அத்த.." என்றாள் ஷ்ருதி

"சரிமா நான் ஃபோன்ல உனக்கு எல்லா பக்குவமும் சொல்லிடறேன்.. நீ பண்ணத ஃபோட்டோ எடுத்து வாட்ஸ் ஆப்ல அனுப்பு.."

"என்ன அத்த சொல்றீங்க..? ஊருக்கு போறீங்களா..?"என்றாள் வருத்தமாக

"ஆமா மா நாளைக்கு கிளம்பறோம்.. " என்றார் கீத்தா

"அதெல்லாம் முடியாது அத்த.. நீங்க எல்லாரும் இங்கேயே இருங்க.." என்றாள் ஷ்ருதி அவர் கையை பிடித்து கொண்டு

"என்னமா பண்றது உங்க பாட்டிக்கு கிராமத்துல இருக்க தான் பிடிக்குது.. அவங்கள தனியாகவும் விட முடியாதுல.. நாங்க அவங்களுக்கு துணையா அங்க இருக்கறது தான் சரி.. முன்னாடி ஸ்ரீராம்க்காக இங்க இருந்தேன் இப்ப தான் நீ வந்துட்ட நீ அவன பாத்துப்ப.. நாங்க அங்க நிம்மதியா இருப்போம்.. ஸ்ரீராம்க்கு பிடிச்சத சமைச்சு குடுப்ப..  அவன நேரா நேரத்துக்கு சாப்பிட வைப்ப உடம்புக்கு சரியில்லாத நேரத்துல அவன கவனிச்சுப்ப.. நாங்க அடிக்கடி வந்து ஒரு வாரம், பத்து நாள் இங்க தங்கிட்டு போவோம் சரியா மா.."
என்றார்

அவர் கூறியது ஷ்ருதிக்கு நெருடலாய் இருந்தது..
ஸ்ரீராமை தன்னிடம் ஒப்படைத்து விட்ட நிம்மதியில் அவர் இருக்கிறார்.. ஆனால் இது நிரந்தரமில்லையே.. என்றேனும் ஒரு நாள் தான் எல்லோரையும் உதறிவிட்டு போகப் போகிறோம்.. இந்த வீட்டின் நிம்மதியை குலைக்க போகிறோம் என்று அவள் பரிதவித்தாள்..

என் சுவாசக் காற்றில் எல்லாம் உன் நினைவே..♡♡Where stories live. Discover now