சுவாசம் : 9

2.9K 113 38
                                    

                  தன் வேலைகளை பழைய  பொறுப்பு உணர்வுடன்  கவனிக்கலானான்.. ஆனால் அந்த பெண்ணையும் மறந்துவிடாமல் இருந்தான்..

     'அந்த பொண்ணு யாருன்னே தெரியலையே.. ஒரு நாள் mallல பாத்தோம்.. இன்னொரு நாள் கார்டன்ல பாத்தோம்.. அப்பறம் வேற எங்கயுமே பாக்க முடியலயே.. எங்க இருக்கா..? என்ன பேரா இருக்கும்..? எப்டி அந்த பொண்ண கண்டுபிடிக்கிறது..? ஃபோட்டோ வச்சு டிடெக்ட்டிவ் ஏஜன்ஸில சொல்லி.. சே சே.. ஒரு அக்யூஸ்ட்ட தேடற மாதிரியா என் தேவதைய தேடறது.. சே.. என்ன இது இப்டி புலம்ப வச்சுட்டாளே.. அவ என் கண்ல படாமலே இருந்திருக்கலாமே.. எல்லாம் இவனால..' என்று தன்னருகில் அமர்ந்து ஐஸ்க்ரீமை ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்த மைக்கேலை முறைத்தான் ஸ்ரீராம்

'இவன்கிட்ட சொல்லி ஐடியா கேட்கலாமா..? வேண்டாம் வேண்டாம்.. சும்மாவே கிண்டல் பண்வான்..  இந்த விஷயம் தெரிஞ்சா ரொம்ப கலாய்ப்பான்.. அவ எனக்காக பிறந்திருந்தா இன்னொரு முறை என் கண்ணுல படட்டும்.. நானே அவகிட்ட பேச முயற்சி எடுக்குறேன்.. அப்டி இல்லனா..' என்று யோசித்துக் கொண்டிருந்த ஸ்ரீராமின் தோள் மேல்
மைக்கேல் கைவைக்க ஸ்ரீராமின் எண்ண ஓட்டம் கலைந்தது..

"மச்சான்.. நீ காதலிக்க ஆரம்பிச்சுட்டனு நினைக்கிறேன்.. யார் அந்த பொண்ணு.. ?"என்றான்

ஸ்ரீராம் பதிலேதும் கூறாமல் அவனையே பார்த்தபடி, 'கண்டுபிடிச்சுட்டானா..?' என்று முகத்தில் திகைப்பை காட்டாமல் எண்ணினான்

"என்ன.. இல்லையா..? அப்ப காத்து கருப்பு ஏதாவது..?"என்றான் மீண்டும்

'ம்ச்.. இவன் ஒருத்தன்..' என்று எண்ணிக் கொண்டான்..

ஒருவாரம் கழிந்தது.. ஸ்ரீராமின் நாட்கள் பணி மிகுதியால் துரிதமாய் சென்றது..

வேலையின் நடுநடுவே ஸ்ரீராம் மனதில் அந்த பெண் வந்து எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள்..

'நம்மை நாமே முட்டாளாக்கி கொள்கிறோமோ..' என்று எண்ணினான் ஸ்ரீராம்

என் சுவாசக் காற்றில் எல்லாம் உன் நினைவே..♡♡Où les histoires vivent. Découvrez maintenant