சுவாசம் : 16

2.4K 97 33
                                    

                              காலையில் ஸ்ரீராம்  வழக்கத்திற்கு முன்னதாகவே கண் விழித்துவிட்டான்..
ஜாகிங் முடித்து வந்தான்,

"பத்து மணிக்கு கிளம்பினா போதும் மூன்றைக்கே சென்னை ரீச்சாய்டலாம்.. அப்றம் அண்ணாநகர் போக கரக்ட்டா நாலு மணி ஆகும்.. இப்ப மணி ஏழு தான் ஆகுது.. கிளம்பற வரைக்கும்  ப்ராஜக்ட் ஃபைல் எடுத்து பாப்போம்.."
என்று ஃபைலுக்குள் மூழ்கினான்..

ஷ்ருதியின் வீட்டில்..

"ஷ்ருதி.. உனக்கு இன்னிக்கு நகை வாங்க போகலாம்னு அப்பா சொன்னாங்க..  பத்து மணிக்கு ரெடியாகிடுமா.." என்றார் மஹாலஷ்மி

"ம்மா.. நான் நடனாலயா போகனுமே.. டான்ஸ் ப்ராக்ட்டிஸ் இருக்கு.."

"லீவ் போடுமா.."

'ஐயையோ.. நான் இன்னிக்கு முக்கியமான வேலை வச்சிருக்கேனே.. இன்னிக்கு விட்டுட்டா அப்றம் ச்சான்ஸ் கிடைக்காதே..  இன்னிக்கே அவர் சென்னைக்கு ஏதோ வேலையா வரதுனால மீட் பண்ண ஒத்துக்கிட்டாரு.. நாம நெனச்ச நேரத்துக்கெல்லாம் அவர் வருவாரா என்ன..?'

"லீவ் லாம் போட முடியாதும்மா.. நாளைக்கு வேணா  ஷாப்பிங் போகலாமே "

"ஷ்ருதி.. தங்கம் விலை இன்னிக்கு குறைஞ்சு இருக்கு.. நாளைக்கு விலை கூடிட்டா என்ன செய்யறது.. காலாகாலத்துல வாங்க வேண்டியதெல்லாம் வாங்க வேண்டாமா..  ஒரு நாள் தானே லீவ் போடு.." என்றார் சற்று கடுமையுடன்

'நாலு மணிக்கு தான வர சொல்லியிருக்கோம்.. அம்மா காலைல தான ஷாப்பிங் ப்ளான் பண்ணிருக்காங்க..' என்று மனதில் எண்ணியபடி
"சரி.. ஆனா நான் மதியத்துக்கு மேலயாவது போறேனே.." என்றாள்

"சரிம்மா.. ஆனா ஆறு மணிக்குள்ள வீட்டுக்கு வந்துடனும்.. இன்னும் ரெண்டு மாசம் தான் இருக்கு கல்யாணத்துக்கு.. வெளியிடத்துல ரொம்ப நேரம் இருக்கிறத குறைச்சிக்கோ.." என்றுக் கூறிச் சென்றார்

"ம்.." என்று கூறிவிட்டு

'ச்ச கல்யாண பேச்சு ஆரம்பிச்சதும் இவ்ளோ ரெஸ்ட்ரிக்ஷன்ஸ்.. ஐ ஹேட் திஸ்.. ' என்று மனதிற்குள் புலம்பினாள் ஷ்ருதி

என் சுவாசக் காற்றில் எல்லாம் உன் நினைவே..♡♡Donde viven las historias. Descúbrelo ahora