சுவாசம்: 20

2.6K 107 38
                                    

                       "என்ன கோப்பி ஸர் ப்ரேக் டைம்ல கூட சின்சியரா வேலை பாத்துட்டு இருந்தீங்க போல.. உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவில்லையா.."
என்று அலுவல் நேரம் முடிந்து வீட்டுக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்த கோப்பியிடம் வினவினான் ஆனந்த்

"நம்ம பாஸ்ஸோட ரிசப்ஷன் கார்ட் ப்ரூஃப் அனுப்பிட்டு இருந்தேன்ப்பா.. ஆஃபிஸ்லயே விட்டுட்டு போய்ட்டாராம்..  உடனே அனுப்ப சொன்னாரு.."என்றார்

கல்பனாவும் லலிதாவும்  full makeup  உடன்  ரெஸ்ட் ரூமிலிருந்து வந்தனர்..

"பாஸ்க்கு கல்யாணம் ஆகிடுச்சா..? ஹூ இஸ் தட் லக்கி கர்ள்..!!" என்றாள்  கல்பனா  

"ராம் ஸர்ரோட வைஃப் யாருன்னு  தெரிஞ்சுக்க ரொம்ப ஆர்வமா இருக்கு.." என்றாள்  லலிதா

"ஷ்ருதின்னு போட்டிருந்துச்சு இன்விட்டேஷன்ல.. " என்றார் கோப்பி

"ஓ.. லக்கி ஷ்ருதி.." என்று கூறினாள் கல்பனா ஏக்கத்துடன்

"சரி சரி ஃபீல் பண்ணாதீங்க மிசஸ்.கல்பனா.." என்றான் ஆனந்த்

"நான் ஏன் ஃபீல் பண்றேன்டா இடியட்.."

"நீங்க பொறாமைல பொங்குறது உங்க  கண்லயே தெரியுது ஆன்ட்டி.." என்றான் அங்கு வந்த ஷிவா

"போடா fool..நான் ஆன்ட்டியா..?" எ

"சரிங்க ஆன்ட்டி நாங்க இப்போ உங்ககிட்ட பேசி டைம் வேஸ்ட் பண்ண விரும்பல..எங்களுக்கே நிறைய வேலை இருக்கு..  பாஸோட ரிசப்ஷன்க்கு நிறைய பொண்ணுங்க கண்டிப்பா வருவாங்க.. நாம என்ன மாதிரி ஸ்டைல்ல போகலாம்..?" என்றான் ஆனந்த் ஷிவாவிடம்

"நீ என்ன ஸ்டைல் பண்ணாலும் சரி எல்லா கண்ணும் ராம் ஸர்ர தான் சுத்தி வரும்.. உங்கள யாரும் பாக்க ச்சான்ஸே இல்ல.." என்றாள் லலிதா

"அதான் அவர் கமிட்டாகிட்டாருல அப்பறமும் எங்களுக்கு ச்சான்ஸ் கிடைக்காதா..?" என்றான் ஷிவா

" எங்களுக்குளாம் ச்சான்ஸ் நாங்களே ஏற்படுத்திக்குவோம்.. ச்சான்ஸ்க்காக நாங்க காத்திருக்க மாட்டோம்.." என்றான் ஆனந்த்

என் சுவாசக் காற்றில் எல்லாம் உன் நினைவே..♡♡Donde viven las historias. Descúbrelo ahora