சுவாசம்: 15

2.6K 101 61
                                    

                    ஷ்ருதி - ஸ்ரீராமின் திருமண வேலைகள் துவங்கியது..

பிரபாகரன் சில அழைப்பிதழ் மாதிரிகளை வாங்கி வந்திருந்தார்..

"ஸ்ரீராம்.. இதுல எந்த டிசைன் பிடிச்சிருக்குனு சொல்லு.. நாளைக்கு ப்ரின்ட் பண்ண குடுக்கனும்.." என்று அவனிடம் கொடுத்தார்

ஸ்ரீராம் அதை வாங்கி பார்த்துவிட்டு,

"ப்பா.. நான் ஆல்ட்ரடி செலக்ட் பண்ணிட்டேன்.. " என்றான் தயங்கியபடி

"அதுக்கு ஏன்ப்பா இப்டி தயங்குற..? உனக்கு பிடிச்சிருக்குனா ஓக்கேப்பா.."
என்றார் புன்னகைத்தபடி

அவன் அந்த அழைப்பிதழ் சாம்ப்பிளை கொண்டு வந்து காட்டினான்..

அனைவருக்கும் பிடித்திருந்தது..
அதையே ப்ரின்ட் செய்ய முடிவு செய்தனர்..

"ஸ்ரீராம் கண்ணா.. ரோபோட் மாதிரி இருந்த உன்ன இப்டி மாத்துன ஷ்ருதி பொண்ண எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.." என்றார் ஜானகி மகிழ்வுடன்

அவன் சிரித்துக் கொண்டே தன்னறைக்கு சென்றான்

ஷ்ருதியின் இல்லத்தில்..

"ஷ்ருதி.. வாம்மா நாம போய் wedding card select பண்ணிட்டு அப்டியே ப்ரின்ட் பண்ண குடுத்துட்டு வந்துடலாம்.. " என்றார் ஜெயப்பிரகாஷ்

"Card தானேப்பா.. உங்க செலக்ஷன் பெஸ்ட்டா இருக்கும்ப்பா.. நீங்களே செலக்ட் பண்ணிடுங்க.." என்று நாசூக்காக நழுவினாள்

நாட்கள் நகர்ந்தன..

"ஸ்ரீராம்.. உன் கல்யாணம், சென்னைல நடக்க போகுது.. உங்க ஆஃபிஸ் ஸ்ட்டாஃப் எல்லாரையும் பஸ் அரேன்ஞ் பண்ணி கூட்டிட்டு போய்டலாமா..?" என்றார் கீத்தா

"இல்லம்மா.. கல்யாணம் முடிஞ்சதும் க்ளையன்ட்ஸ்க்கும் ஸ்ட்டாஃப்ஸ்க்கும் இங்க நம்ம ஊர்ல ஒரு பார்ட்டி அரேன்ஞ் பண்ணிக்கலாம்.. அப்டியே ஷ்ருதிய எல்லாருக்கும் இன்ட்ரொட்யூஸ் பண்ணிடலாம்.. " என்றான்

"ம்.. நல்ல யோசனைப்பா.. "என்று கூறி  சென்றார் அன்னை

ஸ்ரீராமிற்கு ஷ்ருதியிடம் பேச வேண்டும் போல் இருந்தது..

என் சுவாசக் காற்றில் எல்லாம் உன் நினைவே..♡♡Where stories live. Discover now