நாட்கள் சில உருண்டோடின..
ஒரு நாள் பணி முடிந்து காரில் சென்றுக்கொண்டிருந்த போது,
" என்ன ஷ்ருதி ஆஃபிஸ்ல ஜாயின் பண்ணி 3 வீக்ஸ் ஆச்சு.. ஆஃபிஸ் வேலையெல்லாம் பிடிச்சிருக்கா..?" என்றான் ஸ்ரீராம்"ம்.. ரொம்ப பிடிச்சிருக்கு.. லலிதா, தீபா சங்கீதா பவித்ரா எல்லாரும் ரொம்ப ஃப்ரெண்ட்லியா பழகுறாங்க.. ஆனந்த்- கோப்பி ஸர் இவங்க இரண்டு பேரோட கான்வர்சேஷனும் நாள் ஃபுல்லா கேட்டுட்டே இருக்கலாம்.. செம காமெடியா இருக்கும்.." என்றாள்
"அப்ப ஆஃபிஸ்ல வேலையெல்லாம் பாக்குறதில்லயா..?!" என்றான் குறும்பாக
"ம்.. அதுவும் நடக்கும் ஸைட் பை ஸைடா.."
என்றாள் அவளும் குறும்பாக"சரி..என்னை பத்தி என்ன பேசிக்கிறாங்க..?"
"ம்ஹூம்.. அதெல்லாம் சொல்லமாட்டேன்.."
"ஏன்..?"
"ஏன்னா இது ஷ்ருதி.. அது கீர்த்தி.. ஹா ஹா.." என்று சிரித்தாள்
"சில நேரம் உன்னோட இந்த எதிக்ஸ் ரொம்ப தொல்லையா இருக்கு.." என்றான்
இவ்வாறு பேசிக் கொண்டே வீடு திரும்பினர்..
ஆஃபிஸில் மட்டுமல்லாது ஸ்ரீராம் கம்பனி விஷயமாக வெளியிடங்களுக்கு செல்லும் போதும் வெளியூர் செல்லும் போதும் ஷ்ருதியும் அவனுடனே போக வேண்டியது இருந்தது..
அதுவும் சில நேரம் ஜாலி ட்ரிப்பாகவே அமைந்துப் போகும்..
ஒரு நாள் ஸ்ரீராம் வழக்கம் போல தன் கேபினில் வேலை செய்துக் கொண்டிருந்தான்..
ஷ்ருதி வேகமாக கேபினுள் வந்தாள் கதவையும் தட்டவில்லை.. எப்போதும் அவள் அவ்வாறு செய்பவள் அல்ல..
சுற்றி இருந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்...
லலிதா தீபாவை பார்த்து 'இவளுக்கு என்னவாயிற்று?' என்பது போல் முக பாவனையிலேயே வினவினாள்
அதற்கு தீபாவும் 'தெரியவில்லை'என்பது போல் உதட்டை சுழித்து தோலை உயர்த்தி தலையை மறுப்பாக அசைத்தாள்..
YOU ARE READING
என் சுவாசக் காற்றில் எல்லாம் உன் நினைவே..♡♡
General FictionCompleted.. Thank you so much friends.. thanks for the support.. Thank you all for keeping my story always in #1 position in general fiction..