சுவாசம் : 13

3K 120 27
                                    

ஷ்ருதி வீட்டில் நேற்று முன் தினம்...

தன்னை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வருகின்றனர் என்றதும் ஷ்ருதி கதி கலங்கி போனாள்..
திருமணம் என்ற எண்ணமே கசந்தது அவளுக்கு..

அன்னையிடம் இப்போது திருமணம் வேண்டாம் என்று கூறினாள் ஷ்ருதி..

"பெண் பார்க்க வர சொல்லியாச்சு மா.. இப்ப வரவேண்டாம்னு சொன்னா நல்லாயிருக்காதுமா.." என்று கூறினார் மஹாலக்ஷ்மி

'சரி.. அவர்கள் சும்மா பார்க்கத்தானே வருகின்றனர் பின்னர் பார்த்துக் கொள்வோம்' என்று நினைத்தாள்

'என்னை மாப்பிள்ளை வீட்ல யாருக்கும் பிடிக்க கூடாது பிடிக்க கூடாது..' என்று மனதிற்குள் வேண்டியபடியே உறங்கினாள்..

மறுநாள் காலை.. தலை வரை பெட்ஷீட்டை போர்த்திக் கொண்டு உறங்கி கொண்டிருந்த ஷ்ருதியை எழுப்பினாள் அவளது தங்கை சௌந்தர்யா,

"அக்கா.. எழுந்திரு.. எவ்ளோ நேரம் தூங்கிட்டு இருக்க.."

ஷ்ருதி விறுட்டென்று பெட்ஷீட்டை விளக்கி எழுந்தமர்ந்தாள்.. தன் தங்கையை பார்த்து,
"அலார்ம் அடிக்கலையா..? ரொம்ப நேரம் தூங்கிட்டேனா..?" என்று கேட்டுக் கொண்டே மொபைலில் மணி பார்த்தாள்

"5 மணி தானடி ஆகுது.. அதுக்குள்ள ஏன்டி எழுப்பின..?" என்று சலிப்புடன் கேட்டுவிட்டு மீண்டும் படுத்து பெட்ஷீட்டுக்குள் புகுந்தாள்

"இன்னிக்கு உன்ன பொண்ணு பாக்க வராங்க.. நீ இவ்ளோ நிம்மதியா தூங்கிட்டு இருக்க.. எந்திரி.. எந்திரி.. எந்திரி.. " என்று ஷ்ருதியை கைப்பிடித்து எழுப்பிவிட்டாள்

"ஐய்யோ.. விடுடி.. ஆமா.. நீ எப்டி இவ்ளோ சீக்கிரம் எழுந்த..?"என்றாள் ஷ்ருதி

"Examக்கா.. எந்திரிச்சு படிச்சேன்.. சரி.. நீ எழுந்திரு.. என்ன saree கட்ட போற..? நீ எந்த saree கட்டினாலும் சூப்பரா தான் இருப்ப.." என்று தங்கை கூறியதற்கு சிரித்தாள் ஷ்ருதி

"மாப்பிள்ள ஃபோட்டோ பாத்தியா சூப்பரா இருக்காரு.. அவரையே ஓக்கே சொல்லிடுக்கா.." என்றாள்

என் சுவாசக் காற்றில் எல்லாம் உன் நினைவே..♡♡Where stories live. Discover now