சுவாசம் : 39

841 19 9
                                    

                        அவளது பாராமுகம் அவனை ரணமாக்கியது.. சில நாட்கள் இந்த மனநிலையிலேயே சென்றது..

அவளது முடிவு இதுவென்றால் அவன் அதை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்..
தன் சுயநலத்துக்காக அவள் தன்னை விட்டு போகக் கூடாது என்று எண்ணுவது தவறு என்று ஒவ்வொரு நாளும் அவன் தனக்குத்தானே ஞாபகப்படுத்திக் கொண்டே இருந்தான்..

அவளது மனமோ.. தான் இங்கிருந்து கொண்டு அவனது வாழ்வையும் கெடுத்துக் கொண்டிருப்பதை விரும்பவில்லை.. ' அவர் யாரை விரும்புகிறாரோ அவளையே திருமணம் செய்துக் கொள்ளட்டும்.. நன்றாய் வாழட்டும்.. நான் இனி இடைஞ்சலாக இருக்க வேண்டாம்.. திருமணத்திற்கு முன்பே தீர்மானித்தது போல் நான் என் நடனத்தை தொடர்கிறேன்.. இனி முழு மூச்சாக நடனம் ஒன்றையே என் இலட்சியமாக்கி கொள்கிறேன்..
அது தான் இனி என் வாழ்க்கை..' என்று எண்ணினாள்

அவனிடமிருந்து விடைபெற்று செல்ல மனதை ஒரு நிலைப்படுத்தி கொண்டாள்.. தன் துணிகளை பெட்டியில் அடுக்கி வைத்தாள்.. அவன் வாங்கி தந்த நகைகளை கப்போர்டிலேயே வைத்துவிட்டு தன் நகைகளை மட்டும் எடுத்துக் கொண்டாள்..

அவனது முகத்திற்கு நேராக கூறி‌ விடைபெற அவளுக்கு நா எழவில்லை..
தான் எண்ணியதை எல்லாம் ஒரு கடிதமாக எழுதினாள்..

ஸ்ரீராம் ஹாலில் அமர்ந்திருந்தான்..

"ராம்.. " என்று அழைத்து அந்த கடிதத்தை கொடுத்தாள்..
அதை வாங்கிக் கொண்ட அவன் அவளை புரியாமல் நோக்கினான்..

"நான் சென்னைக்கு போறேன்.." என்று கூறிவிட்டு ரூமிற்கு செல்ல திரும்பினாள்

"போறதாவே முடிவு பண்ணிட்டியா ஷ்ருதி.. ஏன் ஷ்ருதி.." என்றான் கெஞ்சும் குரலில்

"ஸ்ரீராம்.. அந்த லெட்டர படிங்க உங்களுக்கு புரியும்.." என்றாள் சோகமாக

"ஷ்ருதி.. நீ இதுல என்ன எழுதியிருந்தாலும் பரவாயில்ல..நான் அத தெரிஞ்சுக்க விரும்பல.. நான் சொல்றத நீ தயவு செஞ்சு கேளு.. ஏன் போறேன் போறேன்னு சொல்ற..? நாம ரெண்டு பேரும் தான் ஒன்னு சேரனும்னு அந்த ஆண்டவனே தீர்மானம் பண்ணியிருக்கான்னு உனக்கு ஏன் புரியமாட்டிங்குது..? " என்றான்

என் சுவாசக் காற்றில் எல்லாம் உன் நினைவே..♡♡Where stories live. Discover now