சுவாசம்: 21

2.4K 109 40
                                    

இட்டேலி ட்டூர் முடிந்து ஸ்ரீராம் தம்பதியினர் பெங்களூரூ திரும்பினர்..

பின் மறுவீடு சம்பிரதாயமாக ஷ்ருதியின் தாய் வீட்டுக்கு சென்று இரண்டு நாட்கள் தங்கியிருந்துவிட்டு வந்தனர்..

ஷ்ருதியின் அன்னை அவளுக்கு நிறைய அறிவுரைகளை சீதனமாக வழங்கினார்..

"எல்லார்கிட்டயும் நல்ல பேர் வாங்கனும்மா.. உன் மாப்பிள்ளையோட அம்மாவும் பாட்டியும் நல்ல விதமா தான் தெரியறாங்க.. அன்பா பழகுறாங்க.. நீ கவனமா நடந்துக்கோமா.. உனக்கு தெரியாதது இல்ல.. இருந்தாலும் இதெல்லாம் சொல்றது அம்மாவோட கடமை.."
என்றார் மஹாலஷ்மி

"சரிம்மா.. " என்றாள் அன்னையின் தோளில் சாய்ந்து..

ஷ்ருதி காலையில் சீக்கிரமே எழுந்து கீத்தாவுக்கு சமையல் வேலையில் உதவி செய்வாள்..

" கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்கோம்மா.. உன் வீட்ல இருக்கிற மாதிரியே இரு.. சங்கடமா feel பண்ணாத.." என்று கீத்தா ஷ்ருதியை வற்புறுத்தி ஓய்வெடுத்துக் கொள்ளும்படி கூறுவார்..

அவ்வாறு கூறுவது அவர்களது பெருந்தன்மை அதேப்போல் தன்னால் இயன்றவரை அவர்களுக்கு உதவுவது தன்னுடைய கடமை என்று ஷ்ருதி அவருக்கு உதவி செய்துவிட்டு ஓய்வெடுப்பாள்..

ஜானகியையும் ஷ்ருதிக்கு மிகவும் பிடித்திருந்தது.. பொதுவாக
வயதான பெண்மணிகளை ஷ்ருதிக்கு மிகவும் பிடிக்கும்.. அவர்களுடன் பேசும்போது பல விஷயங்கள் அறிந்துக் கொள்ள வாய்ப்பு கிடைக்கும் என்று அவளது அன்னை அடிக்கடி கூறுவார்..

தங்களது பாட்டியுடன் அவ்வாறு பழகும் வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று ஷ்ருதியும் சௌந்தர்யாவும் ஏங்கியதுண்டு..

ஜானகி பாட்டி கிடைத்ததில் ஷ்ருதி மிகவும் மகிழ்ந்தாள்.. எனினும் அதை வெளிக்காட்ட தயங்கினாள்..

ஜானகி பாட்டி அந்தக்காலத்திலேயே பி.யூ.சி. படித்திருந்தார்..
இள வயது பெண்கள் போல் கேலியாய் பேசினார்..
ஆங்கிலமும் சுமாராக தெரிந்து வைத்திருந்தார்..
ஷ்ருதியிடம் மிகவும் நெருக்கத்துடன் பழகினார்..
மொத்தத்தில் மாடர்ன் பாட்டியாய் இருந்தார்..
அவரது கலகலப்பான பேச்சு, கர்வமற்ற இனிமையான சுபாவம் ஷ்ருதிக்கு மிகவும் பிடித்திருந்தது..

என் சுவாசக் காற்றில் எல்லாம் உன் நினைவே..♡♡Donde viven las historias. Descúbrelo ahora