சுவாசம் : 40

1.7K 26 13
                                    

ஷ்ருதி காலையில் எழுந்து குளித்து முடித்து தன் கணவனுக்கு காஃபி கொண்டு வரவும் ஸ்ரீராம் ஜிம்மில் இருந்து வொர்க் அவுட் முடித்து வியர்வையை துடைத்துக் கொண்டே வரவும் சரியாய் இருந்தது..

"இந்தாங்க காஃபி.." என்று அவனிடம் கொடுத்தாள்

அதை வாங்கிக் கொண்டு சோஃபாவில் அமர்ந்தான்..

"உனக்கு எங்க..?"

"இதோ எடுத்துட்டு வரேங்க.."என்று கிச்சனுக்கு சென்று தனக்கொரு காஃபி கப்பை கொணர்ந்தாள்

அவன் அருகில் அமர்ந்துக் கொண்டாள்..

"ஷ்ருதி.. நம்ம வெட்டிங் டே-க்கு இன்னும் ஒரு மாசம் இருக்கு.."

"அட.. ஆமாங்க.. அதுக்குள்ள எப்டி ஒரு வருஷம் ஓடுச்சுன்னே தெரியல.."

"நான் ஒரு ப்ளான்‌ வச்சிருக்கேன்.."

"என்னங்க..?"

"நம்ம தான் ரிசப்ஷன் கேன்சல் பண்ணிட்டோம்ல அதனால வெட்டிங் டேக்கு ஒரு பார்ட்டி அரேன்ஞ் பண்ணப்போறேன்.. அப்ப நீ என்னோட வைஃப்னு எல்லாருக்கும் அனௌன்ஸ் பண்ணப் போறேன்.."

"கிட்டத்தட்ட ரிசப்ஷன் மாதிரின்னு சொல்லுங்க.."

"ஆமா டார்லிங்.."

"சரிங்க.. ப்ரியா என்கிட்ட சொன்ன விஷயம் தான் இன்னும் குழப்பமாவே இருக்கு.."

"நானும் கேட்கனும்னு நெனச்சேன்.. ப்ரியா என்ன சொன்னா..? நம்ம கதைக்குள்ள அவ எப்டி வந்தா..?"

" ப்ரியா நம்ம ஆஃபிஸ்ல ரீஜாய்ன் பண்ண கொஞ்ச நாள்ல என்கிட்ட வந்து..." என்று அவள் கூறிய அனைத்தையும் கூறினாள்

"அவ சொன்னா அப்டியே நம்பிடுவியா..? என்கிட்ட கேட்கனும்னு கூட தோணலையா..?"

என் சுவாசக் காற்றில் எல்லாம் உன் நினைவே..♡♡Where stories live. Discover now