சுவாசம் : 33

566 19 4
                                    

ஒரு நாள் விடுமுறையில் ஸ்ரீராமின் வீட்டாருடன் ஸ்ரீராம் ஷ்ருதி இருவரும் வீடியோ காலிங் பேசிக் கொண்டிருந்தனர்..

அப்போது ஜானகி, " உங்க ரெண்டு பேரையும் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு.. நேர்ல பாக்கனும் போல ஆசையா இருக்கு" என்றார்

"நாளைக்கே கிளம்பி வாங்க பாட்டிமா.." என்றான் ஸ்ரீராம்

"ஃபார் அ ச்சேன்ஞ் நம்ம அங்க  போகலாமா.." என்றாள் ஷ்ருதி ஸ்ரீ ராமிடம்

"இது ரொம்ப சின்ன கிராமம் மா..  அங்க நம்ம வீடு மாதிரி வசதியும் அவ்வளவா இருக்காது.." என்றார்‌ ஜானகி

"பரவாயில்ல பாட்டிமா.. வசதி யில்லனா என்ன நம்ம கிராமத்தையும் பூர்வீக வீட்டையும் பாக்கனும்னு எனக்கும் ஆசையா இருக்கு.." - ஷ்ருதி

அவள் கூறிய விதத்தில் நால்வரும் மகிழ்ந்தனர்..

"ஆமா பாட்டி.. எனக்கும் இந்த சிட்டி லைஃப்ல இருந்து ஒரு மாற்றம் தேவைப்படுது.." என்றான் ஸ்ரீராம்

"சரி அப்போ தாராளமா இரண்டு பேரும் வாங்க.." என்றார் கீதா

அடுத்த வார இறுதியில் இருவரும் பயணம் மேற்கொள்வதாய் இருந்தனர்..

தேனி மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமம் தான் அவர்கள் பூர்வீக கிராமம்..

பெங்களூரு - தேனி ட்ரெயினில் வந்த அவர்களை ஸ்ட்டேஷனில் இருந்து அழைத்து வர கார் சென்றிருந்தது..

சின்ன எஜமானரின் வரவை கண்டதும் அங்கிருந்த வேலையாள் அவர்கள்
இருவரையும் மகிழ்ச்சியோடு வரவேற்று உடைமைகளை உள்ளே எடுத்து சென்றார்..

வாசலில் நின்று வீட்டின் அழகை ரசித்தாள் ஷ்ருதி..

வீடு சின்னதாய் இருப்பினும் தென்னை மரங்கள் பழ மரங்கள் பூச்செடிகள் நான்கைந்து இருக்க ஆடு மாடுகள் கோழிகள் பறவைகள் என அழகான சூழலில் ஸ்ரீராமின் பூர்வீக வீடு அரண்மனை போல் காட்சியளித்தது..

நகரத்து வாழ்க்கை வேண்டாம் இங்கேயே இருக்கிறேன் என்று ஜானகியம்மாள் கூறியது ஏன் என்று‌ இப்போது அவளுக்கு புரிந்தது..

என் சுவாசக் காற்றில் எல்லாம் உன் நினைவே..♡♡Donde viven las historias. Descúbrelo ahora