சுவாசம்: 23

3.7K 76 16
                                    

               ஷ்ருதி கண்களை துடைத்துக் கொண்டாலும் அவள் முகத்தில் சோகம் அப்பி இருந்தது..

              அதை கண்டு ஸ்ரீராம் வருந்தினான்..

'ஷ்ருதிய எப்டி நார்மல் ஸ்டேட்க்கு கொண்டு வர்றது..?
வெளிக்காற்று பட்டா மனசு ரிலாக்ஸ்டா இருக்கும்னு அம்மா அடிக்கடி சொல்வாங்க.. பேசாம டின்னருக்கு வெளியே கூட்டிட்டு போகலாம்..ஆனா அதெல்லாம் அவ விரும்பலைனா என்ன பண்றது..? எதாவது ஐடியா பண்ணனும்..' என்று யோசித்தான்..

அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது..

"ஷ்ருதி.. ஒரு க்ளையன்ட் கிட்டயிருந்து  டின்னர் இன்விட்டேஷன் வந்திருக்கு போகலாமா..?" என்றான்

அவள் இருக்கும் மனநிலையில் வெளியே செல்ல தோன்றவில்லை..
ஆனால் அவனிடம் இனி எந்த மறுப்பும் தெரிவிக்க போவதில்லை என்று முன்பு தீர்மானித்திருந்த காரணத்தினால்  அவள் மறுக்காமல்..

"ம்.. " என்று அமைதியாக தலையாட்டினாள்

"எத்தன மணிக்கு ரெடியா இருக்கனும்..?" என்றாள்

"ஒரு ஒன் ஆர்ல ரெடி ஆக முடியுமா..?" என்றான்

"ம்.." என்று கூறி அறைக்கு சென்று தன்னை இயல்பு நிலைக்கு கொண்டு வர பெரிதும் முயன்றாள்..

பின் அவன் கூறிய நேரத்திற்கு முன்பே தயாராகி வந்தாள்..

காரில் செல்லும் போதும் அவளது முகம் இறுக்கத்துடனேயே இருந்தது.. 
ஸ்ரீராம் காரின் ஏசியை அணைத்துவிட்டு விண்டோவை திறந்து வெளிக்காற்று அவள் முகத்தில் படும்படி செய்தான்..
 
இயற்கை காற்று மென்மையாக ஷ்ருதியை தீண்டியது..

அந்த காற்றை பெருமூச்சாக சுவாசித்தாள் ஷ்ருதி..
சீட்டில் சாய்ந்து கண் மூடிக் கொண்டாள்..

அவளது முகம் லேசாக அலர்ந்தது.. அதை கண்டு ஸ்ரீராம் இதழ் அரும்பியது..

சிறிது நேர பயணத்தின் பின்பு,

"ஷ்ருதி.. ரெஸ்ட்டாரண்ட் வந்தாச்சு.." என்றான் ஸ்ரீராம்

என் சுவாசக் காற்றில் எல்லாம் உன் நினைவே..♡♡Where stories live. Discover now