சுவாசம் :37

673 21 10
                                    

ஷ்ருதியின் இல்லம் மலர் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டது...

திருமணத்துக்காக இரண்டு நாட்கள் முன்னதாகவே வரவேண்டும் என்று ஸ்ரீராம் குடும்பத்தினரிடம் ஷ்ருதியின் தந்தை அழைப்பு விடுத்தார்..

ஒரு நாள் முன்னதாக வந்தனர்..
ஸ்ரீராம் தன் வேலைகளை தள்ளி வைத்துவிட்டு ஷ்ருதியைக் காண ஓடோடி வந்தான்..

ஆனால் அவளோ அவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை..

அவளிடம் பேச வேண்டும் போல் இருந்தது.. ஆனால் இருவரும் தனித்து பேச வாய்ப்பின்றி சொந்தங்கள் குழுமியிருந்தனர்..

'என் உடையவளிடம் பேசக் கூட முடியாம தவிக்கிறேனே..ஏன் அவ எப்போதும்‌ போல என்கூட பேசமாட்றா..? என்கூட மட்டும் தான் இப்டியா இல்ல யார் கூடயும் பேச மாட்றாளா..?!" என்று அவளையே நோட்டமிடலானான்

முதல் நாள் நலங்கு விழா இல்லத்தில் நடைபெறுவதற்கான ஏற்பாடு நடந்தேறிக் கொண்டிருந்தது..

ஸ்ரீராம் தன் தங்கையின் திருமணம் போல் அனைத்து வேலைகளையும் செய்துக் கொண்டிருந்தான்..

'ஹூம்.. ஊருக்கு தான் நல்லவர்.. எனக்கு தான் தெரியும் இவரப் பத்தி..' என்று மனதிற்குள் அவனை திட்டிக் கொண்டிருந்தாள்

சௌந்தர்யாவை அமர வைத்து பெண்மணிகள் நலங்கு வைக்கத் தொடங்கினர்..

"அம்மா.. வாங்க மா மனசார உங்க பேத்திய வாழ்த்தி சந்தனம் பூசுங்க.." என்று ஜானகி அம்மாளை அழைத்தார் ஷ்ருதியின்‌ அன்னை

"நான் எதுக்கு மா..? நீங்க வேற யாரையாவது அந்த நல்ல காரியத்த செய்ய சொல்லுங்க மா.."என்று மறுத்தார்

"இல்லம்மா நீங்க தான் பெரியவங்க எல்லாரும் நல்லா இருக்கனும்னு மனசார நினைக்கிறவங்க நீங்க வாழ்த்துனா அவ வாழ்க்கை ரொம்ப நல்லாயிருக்கும்..  மறுக்காதீங்க.. மா" என்று வற்புறுத்தினார்

"பாட்டிமா வாங்க பாட்டிமா ப்ளீஸ்..நீங்க என்ன காரணத்துக்காக தயங்குறீங்கனு தெரியும்.. ஆனா நல்லது நினைக்கிற மனச தவிர இத்தன வயசு அனுபவமுள்ள பெரியவங்கன்ற ஸ்தானத்த தவிர வேறு எதையுமே ஒரு பொருட்டா எடுத்துக்காதீங்க.. நீங்க முன்னால நின்னு இந்த கல்யாணத்த நல்லபடியா நடத்தனும் பாட்டிமா" என்றாள் ஷ்ருதியும் கெஞ்சலாக

என் சுவாசக் காற்றில் எல்லாம் உன் நினைவே..♡♡Where stories live. Discover now