சுவாசம் : 38

674 23 15
                                    

                 ஸ்ரீராம் வீட்டிற்கு மீண்டும் செல்ல ஷ்ருதிக்கு மனமில்லை..
அங்கு சென்று அவள் தனிமையில் அழுவதை விட இனி தனது எதிர்கால வாழ்வில் ஸ்ரீராம் இல்லாமல் வாழ இப்போதிருந்தே தயாராக வேண்டும் என்றது அவளது மனம்..‌

ஆனால் அத்தையும் பாட்டியும் தன்னை அழைத்து வருமாறு கூறியதாக ஸ்ரீராம் கூறியதால் அவர்களது வார்த்தைக்கு மரியாதை கொடுத்து போவது தான் சரி‌ என்றும் அவர்கள் ஊருக்கு சென்றதும்‌  ஸ்ரீராமிடம் முழுமையாக விடைபெற்று வந்துவிட வேண்டும் என்று தீர்மானித்தாள்..

"சரி.. நான் நாளைக்கு கிளம்பி வரேன்.." என்றாள்

"இல்ல ஷ்ருதி நான் நாளைக்கு வந்து உன்ன கூட்டிட்டு வரேன்.. மாமா கிட்ட சொல்லிடு.." என்றான்

"சரி.." என்று கூறி ஃபோனை வைத்தாள்

ஷ்ருதியின் அன்னை அவளை சாப்பிட அழைக்க வந்தார்..

ஷ்ருதி தன் உடைகளை பேக்கிங் செய்துக் கொண்டிருந்தாள்..

"என்னமா பேக்கிங் பண்ணிட்டு இருக்க..?"
என்றார்

"ஆமாம்மா.. நாளைக்கு அவர்  கூட்டிட்டு போக வராராம்.." என்றாள்

"அப்டியா.. இரண்டு நாள் தங்கிட்டு போக சொல்லுமா.."

"இல்லம்மா.. அவரால லீவ் எடுக்க முடியாது வேலை பிஸியா இருப்பாங்க.."

"அப்டியா.. அப்ப லன்ச் ரெடி பண்ணிடலாம்.. மாப்பிள்ளைக்கு என்ன சாப்பாடு பிடிக்கும்.."

'நானே அவர மறக்கனும்னு ட்ரை பண்ணிட்டு இருக்கேன்.. இவங்க என்னடான்னா  அவர ஞாபகப்படுத்துற மாதிரியே எதாவது பேசுறாங்க..'

அன்று ஒரு நாள் தான் செய்த மட்டன்‌ பிரியாணி, சிக்கன் 65 விரும்பி சாப்பிட்ட காட்சி அவள்  மனக்கண்ணில் விரிந்தது..

'ஷ்ருதி..  இப்டியே டேஸ்ட்டா தினமும் செய்தீனா அப்றம் எங்க அம்மா அடுத்த தடவை என்னை பாக்கும்போது அவங்களுக்கே அடையாளம் தெரியாம போகப் போகுது..'  என்று முதல் முறை தன் சமையலை அவன் வெகுவாக புகழ்ந்ததை எண்ணுகையில் இதழ் ஓரத்தில் புன்னகை அரும்பியது..

என் சுவாசக் காற்றில் எல்லாம் உன் நினைவே..♡♡Where stories live. Discover now