" என்ன அக்கா.. சிட்சுவேஷன் சாங்கா..?" என்றாள் சௌந்தர்யா ஷ்ருதியின் காதருகில் மெல்லிய குரலில்
அப்போது தான் பாடல் இசைத்தது தன் மனதில் அல்ல வண்டியின் மியூசிக் பிளேயரில் என்று உணர்ந்தான் ஸ்ரீராம்..
"ஏய்.. அடி வாங்க போற.. உங்க மாமா இருக்காங்கனு பாக்கறேன்.." என்றாள் ஷ்ருதி செல்ல கோபத்துடன்
"ம்.. அந்த தைரியத்துல தான நானும் பேசறேன்.."
"ம்..."
ஷ்ருதி அவ்வப்போது ஸ்ரீராமை பார்த்துக் கொண்டே இருந்தாள்..
"ஏன் நீங்க மட்டும் அமைதியா இருக்கீங்க..?" என்றாள்
"ம்.. என்னோடு பேச துணை இல்லையே நான் யார் கூட பேச..?" என்றான்
"நான் தான் இருக்கேன்ல என்கூட பேசலாமே.."
"என்கூட பேச உனக்கு விருப்பம் இருக்கோ இல்லையோ தெரியாது.. நான் பேசி உன் மூட ஸ்பாயில் பண்ணிட்டேனா..!! அதான் எதுக்கு வம்புன்னு நான் அமைதியா இருக்கேன்."
"அப்படி நான் என்னிக்காவது சொல்லியிருக்கேனா.. ஏன் இப்படி சொல்லி என்ன கஷ்டப்படுத்துறீங்க..?"
"இல்ல.."
"வேண்டாம் நீங்க எதுவும் சொல்ல வேண்டாம்.." என்று முகத்தை திருப்பிக் கொண்டு கோபமாக கையை கட்டி கொண்டாள்
"நான் சொல்றத கேளு.." என்றான் கெஞ்சலாக
"மாட்டேன் கேட்க மாட்டேன்.. " என்றாள்
"பாரு இப்போ கூட நான் பேசுறத கேட்க மாட்டேங்கிற.."
"சரி கேட்கிறேன் சொல்லுங்க.." என்றாள்
"விருப்பம் இல்லாம கேட்க வேண்டாம்" என்றான்
"இல்ல விருப்பத்தோட தான் கேட்கிறேன்.. சொல்லுங்க.."
YOU ARE READING
என் சுவாசக் காற்றில் எல்லாம் உன் நினைவே..♡♡
General FictionCompleted.. Thank you so much friends.. thanks for the support.. Thank you all for keeping my story always in #1 position in general fiction..