"என்ன.. ஷ்ருதிய இன்னும் காணோமே..? எப்பயும் கரெக்ட் டைம்க்கு வந்துடுவாளே.." என்று 'நடனாலயா' வாசலில் நின்று வழி மீது விழி வைத்து காத்திருந்தாள் இந்து
சற்று தொலைவில் பிங்க் நிற ஸ்கூட்டியில் ஷ்ருதி வருவதை கண்டதும் இந்து முகம் மலர்ந்தாள்..
"என்ன ஷ்ருதி லேட்..?" என்று தோழியிடம் வினவினாள் இந்து
"சாரிடி ட்ராஃபிக்ல மாட்டிக்கிட்டேன்.." என்றாள் ஷ்ருதி
"சரி வா.. ப்ராக்ட்டிஸ் ஆரம்பிக்கலாம்.."
இருவரும் உள்ளே சென்று பரதநாட்டிய பயிற்சியை தொடங்கினர்..
"என்ன girls ப்ராக்ட்டிஸ் எப்டி போய்ட்டு இருக்கு..?.. " என்றவாறு அங்கு வந்தார் அவர்களது குரு பத்மா
"அதப்பத்தி கவலையே படாதிங்க mam அசத்திடுவோம்.. இந்த முறையும் ஷ்ருதிக்கு தான் அவார்ட் கிடைக்கும்.." என்றாள் இந்து
"அப்டிலா இல்ல mam கலாக்ஷேத்ரா institution நடத்துற காம்ப்பட்டீஷன்ல participate பண்றது தான் என்னோட கனவு, ஆசை.. இப்போ தான் அந்த வாய்ப்பு கிடைச்சிருக்கு.. இதுவே பெரிய விஷயம் எனக்கு.."
"உங்க கனவு நனவாகப் போகுது.. ஆல் தி பெஸ்ட் கேர்ள்ஸ்.."
"தாங்க்யூ mam.. " என்றனர் இருவரும்
"போன தடவ நடந்த காம்ப்பட்டீஷன்ல டாப் 20ல செலக்ட் ஆகியிருக்கிங்க.. இந்த முறை கலாக்க்ஷேத்ரா ஸ்டேஜ்ல ஆடப்போறிங்க.. எதிர்ப்பார்ப்பும் காம்ப்பட்டீஷனும் அதிகமா இருக்கும்.. நீங்க கண்டிப்பா சூப்பரா பண்ணிடுவீங்க ஆனா எனக்கு ஒரே பதட்டமா இருக்கு.."
"டோன்ட் வொரி mam.. நீங்க ஒருமுறை ரிகர்ஸல் பாத்துடுங்க.. எதாவது கரெக்ஷன்ஸ் இருந்தா சொல்லுங்க.. " என்றாள் ஷ்ருதி
"சரி மா.. ஆரம்பிங்க.. " என்று கூறி அவர்கள் நடனத்தை பார்வையிட்டார் பத்மா
அவர்கள் ஆடி முடித்ததும்..
"சூப்பர்மா அசத்திட்டீங்க.. காஸ்ட்யூம் எல்லாம் ரெடி பண்ணிட்டீங்கள்ல.. சரி ரிலாக்ஸ் பண்ணிக்கோங்க.." என்று கூறிச் சென்றார்"இந்து.. நீ ஆடுறத பாக்க உன்னோட அத்த பையன் வராரா.." என்றாள் ஷ்ருதி
"இல்லப்பா .. அவர் வெளியூர் போயிருக்காரு.." என்றாள் இந்து சோகமாக
"அச்சச்சோ.. so sadயா.. அந்த சோகத்துல நீ கம்மியா ஆடிடாதடி செல்லம்.."
"அப்பதான் நான் சூப்பராவே ஆடுவேன்.." என்றாள் இந்து
"ஆமாமா இல்லனா அவர பாத்து வெட்கப்பட்டுட்டே இருப்ப.. கரெக்ட் தான்.."என்று கூறி சிரித்தாள்.. இந்துவும் வெட்கத்துடன் சிரித்தாள்
"யாரு chief guestட்டா வரப்போறாங்கனு தெரியுமா..?" என்றாள் ஷ்ருதி
"இல்லப்பா.. என்ன யங்ஸ்ட்டரா வந்தா நல்லாயிருக்கும் நமக்கும் சைட் அடிக்க பொழுது போக்கா இருக்கும்.. ஆனா அவங்களுக்குலாம் பரதம் மேல interest இருக்காது.. யாராவது தாத்தா தான் வருவாரு.. எத்தன நாள் தான் தாத்தாஸ் பாட்டிஸ் முன்னாடி ஆடுறதோ.." என்றாள் இந்து வருத்தமாக
"சரி ரொம்ப ஃபீல் பண்ணாத நெக்ஸ்ட் காம்ப்பட்டீஷன்க்கு உங்க ஆளையே chief guestட்டா போட சொல்லிடுவோம்.."என்று கேலி செய்தாள் ஷ்ருதி
"ஏ.. நான் ஃப்ரெஷ் face யாரையாவது சைட் அடிக்கலாம்னு சொன்னேன்.. நான் பிறந்ததுலயிருந்து அந்த faceஸ தான் பாக்கறேன்.. அங்க வந்தும் same faceசா" என்று இந்து சலிப்புடன் கூற
ஷ்ருதி வாய்விட்டு சத்தமாக சிரித்தாள்..
YOU ARE READING
என் சுவாசக் காற்றில் எல்லாம் உன் நினைவே..♡♡
General FictionCompleted.. Thank you so much friends.. thanks for the support.. Thank you all for keeping my story always in #1 position in general fiction..