சுவாசம் : 18

2.5K 111 49
                                    

                  ஷ்ருதி  கூறியதை ஸ்ரீராமால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை..

"என்ன சொல்ற ஷ்ருதி.. ??" என்றான் அதிர்ச்சியை வெளிக்காட்டாமல்

"ஆமா.. எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்ல.." என்றாள்

'ஏன் இப்டி சொல்ற ஷ்ருதி.. நான் எவ்ளோ ஆசையா உன்ன பாக்கலாம்னு வந்தேன்.. வராமலே இருந்திருக்கலாமோ.. எத்தனையோ தடங்கல் வந்தும் அத்தனையும் தாண்டி உன்ன பாக்க வந்த எனக்கு நீ இப்டி ஒரு அதிர்ச்சி குடுப்பனு நான் கனவுலயும் நினைக்கல..' என்று எண்ணினான்

'கோபமா கத்துவான்னு நெனச்சா அமைதியா இருக்கான்..!!' என்று ஆச்சர்யப்பட்டாள் ஷ்ருதி

அவனது முகம் தான் அமைதியாக இருந்ததே தவிர பல்வேறு கேள்வி அலைகள் அவன் நெஞ்சில் மோதிக் கொண்டிந்தன..

'என்னை உனக்கு பிடிக்கலையா ஷ்ருதி..? நான் உனக்கு பொருத்தமானவன் இல்லையா ஷ்ருதி..? ஒருவேள நீ வேற யாரையாவது விரும்புறியா ஷ்ருதி..??' என்று நினைக்கவும் கசந்தது..

அதை அவளிடமே நேரடியாக கேட்டான்..

அவள் வெறுப்புடன் அவனை பார்த்து,
"ஏன்..? கல்யாணம் வேணாம்னு சொன்னா வேற யாரையாவது லவ் பண்றதா தான் அர்த்தமா..? நல்லதா எதுவுமே யோசிக்க தோணாதா..?"

'ஹப்பா.. அவ யாரையும் விரும்பல.. ' என்று அகம் குளிர்ந்தான்

"பின்ன ஏன் இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்றனு தெரிஞ்சுக்கலாமா..?" என்றான்

ஒரு கணம் தயங்கினாள் ஷ்ருதி..

காரணத்தை தெரிந்துக் கொள்ளும் உரிமை அவனுக்கு உண்டு என்பதால் அவள் தன் லட்சியத்தை பற்றியும் பெற்றோர் வற்புறுத்தியதால்  தான் திருமணத்திற்கு சம்மதித்தது பற்றியும் கூறினாள்..

'அடிப்பாவி.. இதுக்காக தான் கல்யாணமே வேணாம்னு சொல்றியா..' என்று சற்றே நிம்மதியுற்றான்

"சரி ஷ்ருதி.. உங்க எண்ணத்த நான் மதிக்கிறேன்.. ஆனா இந்த கல்யாணம்  உங்க இலட்சியத்துக்கு இடையூறா இருக்கும்னு ஏன் நினைக்கிறீங்க..?" என்றான்

என் சுவாசக் காற்றில் எல்லாம் உன் நினைவே..♡♡Where stories live. Discover now