சுவாசம் : 31

619 19 0
                                    

                          அன்று முதல் நாள் என்பதால் ஷ்ருதிக்கு சற்று படப்படப்பாகவே இருந்தது..

இண்ட்டர்காமில் அழைப்பு வந்தது..

"ஷ்ரு.. கீர்த்தி நோட்ஸ் எடுக்கனும் கேபினுக்கு வா.." என்றது ஸ்ரீராமின் குரல்

"Ok sir.." என்று கூறிவிட்டு‌ குறிப்பேடை எடுத்துக் கொண்டு எம்.டி கேபின்க்கு விரைந்தாள்..
கதவை லேசாக தட்டி, "மே ஐ கம் இன்‌ ஸர்.." என்றாள்

"எஸ்" என்று அனுமதி கிடைக்கவும் உள்ளே சென்றாள்

"உட்காரு ஷ்ரு.. கீர்த்தி.." என்கவும்‌ அவனுக்கு எதிர் இருக்கையில் அமர்ந்தாள்..

அடர் பச்சை நிற சுடிதார் அணிந்திருந்தாள்..‌
கோணல் வகிடெடுத்து கூந்தலை பின்னியிருந்தாள்‌..

மெலிதான தோடு காதோடு உரசியது..
மெலிதான தாலிச் செயின் கழுத்தை அலங்கரித்தது..

கனமான செயின் கூட‌ தன்னவளுக்கு சிரமம் தரக் கூடாதென அவனே சென்று தேர்ந்தெடுத்த செயின் அது.. தாலி போலவே தோன்றாத தாலி.. இந்த வகையில் அவளுக்கு துணைப் போகும் என அவன் நினைத்துக் கூட பார்க்கவில்லை..

'பெண்டாட்டிய பி.ஏ.வாக்கி அவளை ரசிக்கிற பாக்கியம் இதுவரைக்கும் எந்த கணவனுக்கும் கிடைச்சிருக்காது..' என்று எண்ணிக் கொண்டான்

அவனை பாராமல் நோட்டை பார்த்துக் கொண்டிருந்தாள் ஷ்ருதி..

"சொல்லுங்க ஸர்.." என்றாள் தலை தூக்காமலேயே

அவன் அமைதியாக இருக்கவே,

நிமிர்ந்தாள்..

அவனது கண்கள் ரசனையோடு அவளை பார்த்துக் கொண்டு இருந்தது.. இருவர் பார்வைகளும் சங்கமித்தது..


ஒரு பார்வை பார்..
ஒரே பார்வை பார்..
நெஞ்சில் பூ பூத்தாலும் பூக்கட்டும்..
கடும் தீ பிடித்தாலும் பிடிக்கட்டும்..

என் சுவாசக் காற்றில் எல்லாம் உன் நினைவே..♡♡Onde histórias criam vida. Descubra agora