சுவாசம் : 34

592 21 4
                                    

                            மறுநாள் விடியல் அழகாய் இருந்தது.. விடிகாலையிலேயே ஸ்ருதி எழுந்து குளித்துவிட்டு வாயிலுக்கு வந்தாள்..

குயில்களின் குரல்கள் காதில் தேன் மழையாய் பொழிந்தது..
சூரியன் எழுந்து பூமிக்கு ஒளியூட்டினான்..
சில்லென்று வீசும் பூங்காற்று தேகத்தை தழுவியது.‌.

மனதை மறைத்திருந்த மேகம், காதல் என்ற காற்று வீச பறந்தோடியது..
அவளை சுற்றி அனைத்தும் அழகாய் தெரிந்தது..

வாசலை பெருக்கி நீர்‌ தெளித்து அரிசி மாவு கோலம் போட்டுவிட்டு காப்பியும் தேநீரும் தயாரித்து அவரவர் தேவை அறிந்து கொண்டுசென்று கொடுத்தாள்.. கோழிகளுக்கும் பறவைகளுக்கும் உணவு கொடுத்தாள்..

காலை உணவு தயாரிப்பதற்காக கிச்சனுக்கு சென்றாள்..

கீதா சமையல் மேற்பார்வை பார்த்துக்கொண்டிருந்தார்..

"அத்த இன்னைக்கு சமையல் நான் செய்யட்டுமா?" என்றாள் ஷ்ருதி

"இல்லம்மா இங்க அம்மில தான் மசாலா அரைக்கனும்.. இந்த அடுப்பும் விறகு அடுப்பு உனக்கு சரியா வராது மா..  அம்மியில அரைச்சு வைக்கிற குழம்பு எவ்வளவு மணமாவும் ருசியாவும் இருக்கும் தெரியுமா.. சாப்ட்டு பார்த்து நீயே சொல்லு.. இப்போ போய் ரெஸ்ட் எடு மா..  நம்ம வீட்டுக்கு வந்தா நீ தானே செய்யுற.. இங்கே இருக்கிற வரைக்கும் நீ எங்க கூட பேசி சந்தோஷமா இரு அது போதும்.." என்றார்

"சரிங்க அத்தை.. அட்லீஸ்ட் கூடமாட சின்ன சின்ன ஹெல்ப் பண்றேனே.." என்றாள் கெஞ்சலாக

"சரி‌ மா.." என்று அவளுக்கு சிறு சிறு பணிகள் கொடுத்தார்

சமையல் முடிந்ததும் இலை விரித்து தரையில் அமர்ந்து சம்மணமிட்டு சாப்பிட்டு முடித்தனர்..

பின் சற்று நேரம் இளைப்பாறினர்..

காலை உணவு வேளையில் பார்த்த பின்பு ஸ்ரீராமை காணாமல் தேடினாள் ஷ்ருதி

'நான் ஏன் அவர தேடுறேன்..? இதென்ன எனக்கு திடீர்னு இப்டி ஒரு புது ஃபிலிங்..!? ஏன் திடீர்னு ரொம்ப சந்தோஷமா ஃபீல் பண்றேன்..? மனசு ரொம்ப லேசான மாதிரி இருக்கு.. இவங்க யாரையும் பிரிய மனசில்லையா.. அதான் இங்கேயே இருந்திடனும்னு தோணுதா..?
அப்போ நான் போகபோறது இல்லையா..?
ஸ்ரீராம் என் மனசுக்குள்ள எப்போ வந்தாரு..? எப்போ நான் அவர‌ விரும்ப  ஆரம்பிச்சேன்..? அன்னிக்கு பார்ட்டில 'ஷீ இஸ் மை பி.ஏ'ன்னு சொன்னதுக்கு பதிலா வைஃப்ன்னு சொல்லியிருந்தா நல்லாயிருந்திருக்கும்னு நினச்சேனே.. அப்போ இருந்தா..?! இது என்ன காதலா..? இதுதான் காதலா..? நான் என்ன பண்ணட்டும்..? இத வெளிப்படுத்தனுமா..? மனசுக்குள்ள வச்சுக்கனுமா..? இந்த வாழ்க்கை எனக்கு பிடிச்சிருக்கு.. ஸ்ரீராம்.. ஐ லவ் யூ.. எஸ்... ஐ லவ் யூ.. நீங்க இல்லாம.. என்னால யோசிக்க முடியல..' என்று தனக்குள்ளேயே கேள்வி கேட்டு அவளே பதிலாகவும் இருந்தாள்..  இதே எண்ணத்துடன் ஸ்ரீராமை தேடினாள்..

என் சுவாசக் காற்றில் எல்லாம் உன் நினைவே..♡♡Where stories live. Discover now