சுவாசம் : 6

3.4K 128 49
                                    

                          மைக்கேல் சுட்டிக்காட்டிய அந்தப் பெண் அவர்கள் புறம் திரும்பினாள்..

ஸ்ரீராம் மைக்கேல் இருவரும் திகைத்தனர்😝😝

"ராம்.. ஸாரிடா அது பொண்ணில்ல.. ஆன்ட்டி.."என்று மைக் கூற ஸ்ரீராம் சிரித்தான்

ஸ்ரீராம் தோள் மீது கைவைத்து,
"ஸாரிடா மச்சான்.. தௌசண்ட் வாலா புஸ்ஸாயிடுச்சு.. " என்று மைக்
சோகத்துடன் கூற

ஸ்ரீராம் அவனை ஓரக் கண்ணில் முறைத்தான்..

"சரி முறைக்காத.. ஆனாலும் நான் guess பண்ண மாதிரி ஆன்ட்டி அழகா தான்டா இருக்காங்க.. சரி நெக்ஸ்ட் பாப்போம்.."

"போதும்டா.. வர்றியா.. ? நான் போகவா..?" என்று  முன்னால் செல்ல

"சரி.. கோபப்படாதடா.. இன்னிக்கு வாஸ்து சரியில்ல இன்னொரு நாள் வருவோம்.." என்று அவன் உடன் சென்றான் மைக்

"ஏண்டா உனக்கு இந்த வேல..?" என்றான் ஸ்ரீராம்

"நீ மட்டும் எத்தன நாள் தான் இப்டி freeயா ஜாலியா இருப்ப..? என்னை மாதிரி கல்யாணம் குடும்பம்னு கஷ்ட்டப்படட்டுமேனு ஒரு நல்ல எண்ணம் தான்.."

"டேய் காமெடின்ற பேர்ல மொக்க போட்டு நீ தான் சிஸ்ட்டர டார்ச்சர் பண்ற..  அவங்க தான் பாவம் ஆக்ஷுவலா.."

"ம்.. உடனே எதுடா சாக்குனு என் கால வாரிடுவியே.. இத அவ இருக்கும்போது சொல்லிடாத.. அப்றம் அதையே திரும்ப திரும்ப சொல்லி கலாய்ப்பா.."

"அப்ப மொக்க தான் போடுறன்னு ஒத்துக்குற.."

"என்னையே என் வாயால உண்மைய சொல்ல வச்சுட்டானே.. அடப்பாவி.. என் ட்ராக்க இவன் follow பண்ண ஆரம்பிச்சுட்டா அப்றம் நான் புதுசா ஒரு ட்ராக் யோசிக்கனுமே.. ம்.. யோசிப்போம்.." என்று ஓப்பனாகவே தன் மைண்ட்டிடம் பேசினான்

ஸ்ரீராம் சிரித்து விட்டு,
"உன் மைண்ட் கிட்ட பேசி முடிச்சுட்டினா வா போகலாம்.."

"டேய் நீ என்னடா hero roleயும் பண்ற hero friend ரோலையும் பண்ற.. எதாவது ஒன்ன என்ன பண்ண விடுடா.."

என் சுவாசக் காற்றில் எல்லாம் உன் நினைவே..♡♡Where stories live. Discover now