நிச்சயதார்த்த நாள்..
ஷ்ருதியின் இல்லம் பூத்தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது..ஷ்ருதியின் சொந்தங்கள் சிலரும் தோழிகள் சிலரும் வந்திருந்தனர்..
ப்யூட்டீஷியன் பெண்மணி ஷ்ருதிக்கு அலங்காரம் செய்துக் கொண்டிருந்தார்..
ஷ்ருதி, Half whiteட்டில் கோல்டன் கலர் ஸ்ட்டோன் வொர்க் செய்த லெஹெங்காவும் மரூன் நிறத்தில் தங்க நிற கல் வேலைப்பாடு செய்த துப்பாட்டாவும் அணிந்து அதற்கு பொருத்தமாய் ச்சோக்கர், தோடு, வளையல் செட் போட்டிருந்தாள்..
அவளது அடர்த்தியான சுருளான கருங்கூந்தலை சிகை ஆபரணம், மல்லிகைப்பூ சரம் கொண்டு அழகாக அலங்காரம் செய்திருந்தார் அந்த அழகுக் கலை நிபுணர்..
"ஹய்யோ அக்கா.. வாவ்.. செம்ம அழகா அப்டியே ப்ரின்ஸஸ் மாதிரி இருக்க.. மாமா உன் அழகுல மயங்கி விழ போறார்.. " என்று தமக்கையை கேலி செய்தாள் தங்கை
ஷ்ருதி அமைதியாக புன்னகைத்தாள்..
வெளியே கார் சத்தம் கேட்டது..
"அக்கா.. மாமாக்கு ஆயுசு நூறு.. அவர பத்தி பேசின உடனே வந்துட்டாரு.." என்றாள் சௌந்தர்யாஅதற்கும் வெறும் புன்னகை மட்டும் செய்தாள்..
சௌந்தர்யா ஜன்னல் வழியே வெளியே எட்டி பார்த்தாள்..
ஸ்ரீராமிற்கு ஆரத்தி சுற்றிக் கொண்டிருந்தனர்..
ஸ்ரீராம், half whiteட்டில் கோல்டன் எம்ப்ராய்டரி அண்ட் கோல்டன் ஸ்ட்டோன் வொர்க் செய்த ஷேர்வானி, மரூன் நிற pant, மரூன் நிற turban அணிந்து ராஜக்குமாரன் போல் காட்சியளித்தான்..
YOU ARE READING
என் சுவாசக் காற்றில் எல்லாம் உன் நினைவே..♡♡
General FictionCompleted.. Thank you so much friends.. thanks for the support.. Thank you all for keeping my story always in #1 position in general fiction..