"போதும் ராம்.. எவ்வளவு நேரம் தான் ஒரு பூவையே வளச்சு வளச்சு ஃபோட்டோ எடுப்ப..? வாடா அந்தப் பக்கம் போகலாம்.." என்றான் மைக்கேல்
"டே மைக்.. இது அரிய வகை பூக்கள்டா.. அடுத்த flower showல இருக்குமான்னு தெரியல.." என்றான் ஸ்ரீராம்
"பொண்ண பாருடான்னா பூவ பாக்குறானாம்.. " என்று ஸ்ரீராம் காதில் விழாத வண்ணம் மெதுவாக முணுமுணுத்தான்
"சரி.. பூவ எடுக்கல.. நீ நில்லு உன்ன ஃபோட்டோ எடுக்குறேன்.." என்றான் ஸ்ரீராம்
"ஓ.. ரியலி.. நீ இவ்ளோ ரெக்வஸ்ட் பண்ணி கேட்குறதுனால உன் photographic talentக்கு modelலா இருக்க நான் ரெடி.."
இப்படி நிக்கவா..?அப்டி நிக்கவா..? என்று விதவிதமாக நின்று காட்டினான்.."உனக்கு என்னடா.. ? நீ எப்டி நின்னாலும் அழகு தான்.. சீக்கிரமா ஒரு போஸ்ல நிக்கிறியா..? எல்லாரும் நம்மல ஒரு மாதிரி பாக்றதுக்குள்ள.."
மைக்கேல் தன் இரண்டு கைகளையும் ஜீன் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு முகத்தை சைடாக திருப்பி விண்ணை பார்த்துக் கொண்டு ஸ்ட்டைலாக நின்று போஸ் கொடுத்தான்..
ஸ்ரீராம் சிரித்துக் கொண்டே focus அட்ஜஸ்ட் செய்துக் கொண்டிருந்தான்..
அப்போது அவுட் ஆஃப் ஃபோக்கஸில் அந்த தேவதையின் முகம் தெரிந்தது..ஸ்ரீராம் மெதுவாக தன் கேமராவை கீழே இறக்கினான்..
அன்று mallலில் முதன் முதலாய் பார்த்த அதேப் பெண்.. வெள்ளை நிற அனார்க்களியில் அந்த மலர் தோட்டத்தில் வனதேவதையாய் ஒளிர்ந்தாள்..
"உயிரைத் தொலைத்தேன்..
அது உன்னில் தானோ..
இது நான் காணும்
கனவோ..?
நிஜமோ..?
மீண்டும் உன்னைக்
காணும் வரமே
வேண்டும் எனக்கே
மனமே..
மனமே..
விழியில் விழுந்தாய்..
என்னில் எனதாய்
நானே இல்லை..
எண்ணம் முழுதும்
நீதானே
என் கண்ணே.."ஸ்ரீராம் மைக்கேலை மறந்துவிட்டு அந்த பெண்ணை ஃபோக்கஸ் செய்தான்..
தன் மனதில் பதித்திருந்த அந்த முகத்தை தன் கேமராவில் பதிவு செய்தான்..'அவளிடம் சென்று பேசலாமா..?' என்று எண்ணினான்
"ராம்.. ஃபோட்டோ எடுத்தது போதும் வாடா போகலாம்.." என்று அவன் கையை பிடித்து இழுத்துச் சென்றான் மைக்கேல்..
ஸ்ரீராம் செய்வதறியாது திணறினான்..
"டே.. டே.. ஒரு நிமிஷம் கேமரா pouch அங்க விழுந்துடுச்சு.. இரு போய் எடுத்துட்டு வரேன்.."Pouchசை காரில் வைத்துவிட்டு வந்ததை நல்லவேளை மைக்கேல் கவனிக்கவில்லை.. என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான் ஸ்ரீராம்..
"சரி வா.. போய் எடுக்கலாம்.."
"இல்லல்ல.. இந்தா கார் கீ.. நீ போய் வண்டி எடு.. நான் போய் எடுத்துட்டு வரேன்.." என்று ஓடினான் ஸ்ரீராம்
ஸ்ரீராம் சென்று பார்க்கையில் அவள் அங்கே இல்லை.. அந்த கார்டன் முழுவதும் தேடியும் அவள் தென்படவில்லை.. ஏமாற்றத்துடன் திரும்பினான்..
"பாத்துட்டியா தம்பி.." என்றான் மைக்கேல் நக்கலாக
"ம்ச்.. மிஸ் பண்ணிட்டேன்டா.. " என்றான் அவளை நினைத்து
"இதோ இருக்கு பாரு.. " என்று மைக் கூற அவன் அந்தப் பெண்ணை பற்றிக் கூறுகிறான் என்று எண்ணி நாலாப் பக்கமும் கண்ணை சுழலவிட்டு தேடினான்..
"டே.. எங்கடா தேடுற..கேமரா pouch இங்க இருக்கு பாரு என் கையில.." என்றான் மைக்
"ஆங்.. ஆமா.. போகலாமா.." என்று காரில் அமர்ந்தான்
'என்னாச்சு இவனுக்கு வித்தியாசமா நடந்துக்குறான்..?!' என்று மைக்கேல் புரியாமல் விழித்தான்..
YOU ARE READING
என் சுவாசக் காற்றில் எல்லாம் உன் நினைவே..♡♡
General FictionCompleted.. Thank you so much friends.. thanks for the support.. Thank you all for keeping my story always in #1 position in general fiction..