மேகத்தின் மறைவிலிருந்து மெல்ல வெளிப்பட்ட கதிரவன்.. இரவை உறங்க செய்து தனது மெல்லிய கதிர்களை விரித்து வெப்பம் இன்றி வெளிச்சத்தை மட்டும் பரப்பிக் கொண்டிருந்த அந்த காலைப் பொழுதில்..
இதமான பூந்தென்றல் மொட்டுக்களின் மேல் படர்ந்து அதன் வாசனையை தாங்கிக் கொண்டு எண்திசைகளிலும் பரப்பிக் கொண்டிருந்தது..
அந்த அழகிய பூஞ்சோலையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த ஜாகிங் ட்ராக் (jogging track)க்கில் பலதரப்பட்ட மக்கள் நடை பயிற்சி, ஓட்ட பயிற்சி செய்துக் கொண்டிருந்தனர்..
மலர்களை தழுவி சென்ற பூங்காற்று
ஜாகிங் செய்துக் கொண்டிருந்த ஸ்ரீராம்மின் கேசத்தை கலைத்து விளையாடிச் சென்றது..அந்த மலர்களின் மணம் நிறைந்த தூய்மையான பூந்தென்றலை உள்வாங்கி தன் சுவாசக் காற்றாய் ஏற்றுக் கொண்டான் ஸ்ரீராம்..
ஸ்ரீராம், 28 வயது நிரம்பிய இளம் ஆண்மகன்.. பெண்கள் மனதை கவர்ந்திழுக்கும் ஆணழகன்..
கட்டிடக் கலையில் (Architect) பட்டம் பெற்று கட்டுமான நிறுவனத்தை பத்து வேலையாட்களுடன் தனித்து தொடங்கி இன்று கிட்டத்தட்ட நூறு வேலையாட்களுடன் இந்தியாவிலேயே தலை சிறந்த முதல் பத்து நிறுவனங்களில் ஒன்றாய் வெற்றி படிக்கட்டில் ஏறிக் கொண்டிருக்கும் இளம் தொழிலதிபர்.."ஹாய் ராம்.. " என்ற பரிட்சயமான ஆண் குரல் பின்னிருந்து கேட்க திரும்பி பார்த்தான்.
ஸ்ரீராமின் தந்தை பிரபாகரனின் நண்பர் அவனருகில் வந்து நின்றார்..
"ஹாய் uncle.. எப்டி இருக்கிங்க..?"என்று நலம் விசாரித்தான்
"நல்லாயிருக்கேன்ப்பா.. நீ எப்டி இருக்க.. ரொம்ப பிஸி man ஆய்ட்ட உன்ன மீட் பண்ணவே முடியல.. இன்னிக்கு நான் கொஞ்சம் சீக்கிரம் வந்ததுனால உன்ன புடிச்சுட்டேன்.." என்றார்
YOU ARE READING
என் சுவாசக் காற்றில் எல்லாம் உன் நினைவே..♡♡
General FictionCompleted.. Thank you so much friends.. thanks for the support.. Thank you all for keeping my story always in #1 position in general fiction..