💖 Episode - 08 💖

1.1K 46 12
                                    


சிறிது நேரத்தில் taxi வீட்டின் முன் நின்றது. Taxi உஷா காசை கொடுக்க முற்பட, நான் கொடுக்கிறேன் என்று அவனோ அவள் கொடுத்த காசை எடுக்க மறுத்தான்.
"உஷா தேவை எதுவும் இருந்தால் எனக்கு call செய்" என்று தன் நம்பரை எழுதிய காகிதத்தை அவளின் கையில் திணித்தான். "சரி எல்லாற்றிற்கும் தேங்க்ஸ்" என்று சொல்லிவிட்டு டாக்சியில் இருந்து இறங்கி, தன் வீட்டு கேட்டை திறந்து உள்ளே சென்றாள் உஷா. கேரட்டை மூடும்வரை காத்துக்கிடந்தது அந்த taxi உம். இவள் வீடு இதுதான் என்ற என் கெஸ்ஸிங் சரியானது என்று மனதால் நினைத்துக் கொண்டான் அவன்.
அவள் போனதும் அழைத்த call இற்கு திருப்பி அழைப்பு கொடுத்தபடி பேசிக் கொண்டே பயணித்தான் அவனும்.

தந்தை ஒரு தடவை அவளை கண்டித்தது நிறைவுக்கு வரவே பயந்தபடி கதவை திறந்து மாடியேறிப்போக,
"உஷா" என்று சத்தத்திற்கு திரும்பிப் பார்த்தாள். நின்று இருந்தது அக்கா. நல்லவேளை அம்மாவோ, அப்பாவோ இல்ல. இவள எப்படி சரி சமாளித்து விடலாம் என்ற நம்பிக்கையுடன் பாச வலையை விரித்தாள் உஷா.
"அக்கா..." என்று திரும்பி போய் அக்காவை கட்டியணைக்க முற்பட,
"எங்கடி இவ்வளவு நேரம் போன?? அம்மா அப்பா நல்லா பயந்துட்டாங்க. இன்ன கொஞ்ச நேரத்துல விட்டா பொலிஸுக்கும் போய் இருப்பாங்க. Call பண்ணா எடுக்குறதுமில்ல. உன் நல்ல நேரம் நா இன்னைக்கு வீட்டுக்கு வந்தேன். பெத்தவங்க வயசானவங்களே உஷா. கொஞ்சம் பொறுப்பா நடந்துக்கோ. வர லேட்டாகும்னா call பண்ணி இனி சொல்லு சரியா??? "
" சரி அக்கா, என்ன தீடீர் விஜயம்?? " என்று அக்காவின் கன்னத்தை கிள்ளியபடி கேட்க,
" சும்மா தான்டி. எல்லாரையும் பாக்கனும்போல அதான் கிளப்பி வந்துட்டேன். சரி சாப்பாடு எடுத்து வைக்கிறேன். வா சாப்பிடலாம்" என்று அக்கா சொல்ல,
" சரி " என்றவள், அறைக்கு சென்று துப்பட்டாவால் மறைத்திருந்த தன் காயத்தை கண்ணாடியின் முன் இருந்தவாறு நோட்டமிட்டு கொண்டு இருக்க,
" உஷா, உன் powerbank அ அறை முழுவதும் தேடினேன். கிடைக்கல. கொஞ்சம் தாடா" என்று சொன்னபடி  கழுத்தில் bandage உடன் இருந்த தங்கையை பார்க்க பதறிப்போனாள் அக்கா.

காதல் வந்தால் சொல்லிவிடு (completed) Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ