காலையும் அழகாக மலர, தன் கணவனின் அணைப்பிலிருந்து விலகி, நேரத்தோடே உஷா எழுந்து காலை வேலைகளில் ஈடுபட்டாள். காபி ஊற்றிக் கொண்டு வந்து ஆதவனை எழுப்பி, ஆபிஸ் போக தயார் செய்தாள் உஷா.
ஆதவன் போகும்வழில தன்னை அம்மா வீட்டுல drop பண்ணிட்டு போங்கன்னு சொல்ல, அவனும் அதன்படியே செய்தான்.
"ஆதவா, என்ன time க்கு ஆபிஸ் முடியும்??"
" 5மணிக்கு வந்துருவேன். உன்னையும் கூட்டிட்டு வரட்டா??"
"இல்ல தேவல்லடா"
" shopping எப்ப பண்றது???"
" நாளைக்கு, morning free தானே??" என்று உஷாவும் கேட்க,
" ஆம்டா, எனக்கும் today ரொம்ப busy shedule. 5மணிக்கு தான் off ஆகுவேன் "
" சரி ஆதவா, கவனமா போய் வாங்க. நா 5மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துடுவேன்"
" சரி நீயும் கவனம் " என்று அவள் இறங்க கார் கதவை திறக்க முற்பட,
" உஷா "
" ஏன் ஆதவா??? " என்று திரும்பி கேட்க, அவளை இழுத்து நெற்றியில் முத்தமிட்டு,
" இப்போ போகலாம் " என்றான்.
சிரித்தபடியே அவளும் விடைபெற்றாள்.வீட்டு கதவை தட்ட, உஷாவின் தந்தையோ திறக்க, மகளை கண்டதில் அவருக்கோ பெரும் மகிழ்ச்சி. அங்கிருந்து கொண்டு வந்த பழங்களையும் தன் தந்தையின் மற்ற கையில் திணித்தாள் அவள்.
" வாடா செல்லம்" என்று அணைத்துக் கொண்டே உள்ளே சென்றார். உஷாவின் தாயின் பெயரை சொல்லி கூவிக் கொண்டு,
"யாரு வந்திருக்கன்னு வந்து பாருங்க" என்று தந்தையும் சொன்னார்.
" உடம்பு fit இல்லாத மாதிரி இருக்கு. அதான் உன்ன பாக்கனும் போலன்னு நேத்து ஆதவன்கிட்ட அம்மாவும் சொன்னாங்க " என்று பேசிக் கொண்டு இருக்க,
தாயும் வந்தார்.
"இன்னைக்கு லீவ் போட்டேன்மா. நீ இன்னைக்கு வருவதா ஆதவன் call பண்ணி சொன்னான் " என்று சொன்னார்.
உஷாவிடம் அந்த ஊரைப்பற்றியும், ஆதவன் குடும்பத்தையும்பற்றி கேட்க, பெருமையாக அவளும் பல சுவாரஸ்யமான நிகழ்வுகளை சொல்லி மூவரும் சிரித்தபடியே நேரம் பறந்தது. அவளுக்கு பிடித்தமான இட்லி, தோசை, உப்புமா என்று தன் தாய் செய்த உணவுகளையும் வயிராற உண்டாள் உஷா. நேரத்தை பார்க்க, 11மணி.
"அம்மா,அப்பா நா திவ் அக்காவையையும் பார்க்கனும். நான் போய் வர்ரேன்" என்று அவளும் விடைபெற்றாள்.
YOU ARE READING
காதல் வந்தால் சொல்லிவிடு (completed)
Romanceஇருமனங்கள் ஒன்று சேரும் அந்த அழகிய நாளில், குடும்பத்தின் விருப்பத்திற்காக திருமணத்தில் இணையும் கதாநாயகன் கதாநாயகி. காலமும் செல்ல ஒருவர் மேல் இன்னொருவருக்கு காதல் வருமோ? இல்லை விவாகரத்தில் வந்து முடியுமோ? என்று கதையுடன் பயணித்து அறிந்து கொள்வோம். #1...