வீட்டுக்கு சென்று இரண்டாக்குவேன் என்று மனதிடம் உறுதி கொண்டு சென்ற அவனுக்கு, வீட்டினுள்ளே நுழைந்து பார்க்க தூங்கி இருக்கும் அவளை எழுப்பி ஏசவோ மனமே வரவில்லை. உஷா என்ன செய்கிறாள் என்று பார்ப்போம் என்று வெளியே வந்து இலக்கத்தை தட்டினான். ஆனா call ring ஆனது. ஆனா answer பண்ணவில்லை. என்னடா?? ஆள காணல்ல?? ஏதும் பிரச்சினையோ ? இல்லாம இருக்க வேண்டும் என்று நினைத்தபடி தன் வேலைகளை செய்து கொண்டு இருந்தான்.அன்று தன் தாய் தந்தைகளோடு மனம் விட்டு முதன்முதலாக பேசினாள் உஷா. அவ்வளவு காலம் தெரியாத உண்மைகளும் அன்று அவளுக்கு அறிய கிடைத்தது. தன் தாய் வேலைக்கு செல்ல எண்ணமே இருக்கல்ல. ஆனா அப்பா வீடு கட்ட லோன் எடுத்தத கட்டமுடியாம தான் அம்மாவும் தொழிலிக்கு போனதாம். சொந்த பந்தங்கள் எல்லோரும் தொலைதூரத்துல. இதனால அக்காவையும், உன்னையும் வேலைக்கார அம்மா வைத்து பார்த்தோம். அந்த அம்மாவும் இரண்டு வீடு தள்ளி தான் இருந்தாங்க. 3நேரம் சாப்பிட மட்டும் காசு தாங்கன்னு தான் கேட்டாங்க. அதுக்கு நீங்களும் ஓம் பட்டோம். வேலை வந்து tired, அது இதுன்னு பிள்ளைகளுக்கும் எங்களுக்கும் இடையில்ல பெரிய இடைவெளி வந்துவிட்டது. வார சனி, ஞாயிற்றுக்கிழமையும் OT வேல. வெளிய உங்க கூட போறதுக்கும் நேரம் கிடைக்கிறதில்ல. என்று தன் பக்கம் இருந்த நியாயங்களை உஷாவிடம் முன்வைக்க அவர்களின் மேல் பாசமும் அதிகரித்தது.
அம்மா, அப்பா குடிக்கும் மாத்திரைகளை அவர்களின் கையில் கொடுத்துவிட்டு, தூங்குவதற்கு கட்டிலை செய்தும் கொடுத்து விட்டு வெளியேறினாள் உஷா பெரும் நிம்மதியுடன்.பசி வயிற்றை கிள்ளும்போது தான் நினைவுக்கு வந்தது தான் இன்னும் பசியில் இருப்பது. Maggie ஒன்றை போட்டுவிட்டு, டீ ஒன்றை ஊற்றிக்கொண்டு அறைக்குள் வந்தாள். Charge உல் இருந்த தொலைபேசியை பார்க்க, 100% யை காட்டியது. சந்தோசத்துடன் எடுத்து பார்க்க, அரவிந்த் misscalls. என் தாய் தந்தைய எனக்கு கிடைக்க காரணமே இருந்தவன் அரவிந்த் தானே. அவனுக்கு தான் நான் முதல்ல நன்றி சொல்லனும் என்று அவனது தொலைபேசிக்கு அழைப்பு கொடுத்தாள் உஷா. ஆனா answer பண்ணவில்லை. ஏதாவது வேலையா இருக்கும் என்று கடைசி ஒருதடவை call அடிக்க,
"hello, யாரு பேசுறது??" என்று தினமும் அவளுக்கு கேட்கும் அந்த பெண்குரல் கேட்டது.
"உஷா" என்று சொல்ல வாய் எடுக்கும்போதே,
"யார்ட் கேட்டு என் phone அ எடுத்த?? நா சொல்லி இருக்கேனே என் phone அ தொடக்கூடாதுன்னு. ஆயிரம் முக்கியமான கோல் வரும் அதெல்லாம் உனக்கு எதுக்கு??? "
" இல்ல அரவிந்த்.... மிச்ச நேரமா call அடித்தது அதான்.."
" ஒன்னும் தேவல்ல. இனி எடுத்தா நடக்குறதே வேற. தாத்தாக்கும் எனக்கும் பசிக்குது. சும்ம தானே தண்டச்சோறு மாதிரி சாப்பிட்டு இருக்க. ஏதாவது சமைத்து போடு. மரக்கறி கொண்டு வந்து வைத்திருக்கிறேன் "
Phone யை அவன் நெருங்கி வருவது அவனது சத்தம் உரத்து கேட்டது.
YOU ARE READING
காதல் வந்தால் சொல்லிவிடு (completed)
Romanceஇருமனங்கள் ஒன்று சேரும் அந்த அழகிய நாளில், குடும்பத்தின் விருப்பத்திற்காக திருமணத்தில் இணையும் கதாநாயகன் கதாநாயகி. காலமும் செல்ல ஒருவர் மேல் இன்னொருவருக்கு காதல் வருமோ? இல்லை விவாகரத்தில் வந்து முடியுமோ? என்று கதையுடன் பயணித்து அறிந்து கொள்வோம். #1...