" excuse me, எனக்கு டாக்டர் ஒன்னு அவசரமா தேவை. என் மனைவிக்கு சுகம் இல்லை" என்று ஆதவன் கூற,
மறுமுனையில் தெரிந்த டாக்டர் ஒருவர் பக்கத்துல இருக்காங்க. அனுப்பி விட்ரேன் சேர். ரூம் நம்பர் என்ன என்று கேட்க ஆதவனும் அறையின் இலக்கத்தையும் கூறி அழைப்பை துண்டித்தான்.
உஷாவின் அருகே போய், மெதுவாக அவளை எழுப்பாட்ட,
மெதுவாக கண்களை திறந்து ஆதவனை பார்த்தாள் உஷா.
"நா சொன்னேன் தானே வெளியே இருக்காதேன்னு. இப்ப பாரு காய்ச்சல். டாக்டர் இன்ன கொஞ்சத்துல வருவாங்க. வேற டிரஸ் போட்டுக் கொள்ளலாமே. வார டாக்டர் ஆணோ பெண்ணோ தெரியல்லயே " என்று சொல்ல மெதுவாக உஷா எழுந்திருக்க முயல, ஆதவனும் எழ உதவி செய்தான்.
"ஆதவா"
" சொல்லு"
" நா brush உம் பண்ணனும்"
" சரிடா "
" ஆனா எனக்கு காய்ச்சல் வந்தா தலைசுற்று வரும். என் கூட கொஞ்சம் வாரீங்களா washroom இற்கு?? "
" சரி உஷா " என்று அவளின் பின்னாலே சென்றான் ஆதவன்.
அவள் brush பண்ணும்போதும் பக்கத்திலே இருந்தான். முகத்தையும் கழுவிக் கொண்டு வரவே, அவளது கையில் டவலையும் கொடுத்தான். தலைசுற்று மாதிரி இருக்கு என்று கதிரையில் உட்கார்ந்தவள்,
" எழுந்து dressup எல்லாம் பண்ண முடியாது. ஆதவா, நீங்க போட்டு இருக்க t-shirt யை கழற்றி தர முடியுமா if you don't mind?? அது எனக்கு baggy ஆக கொஞ்சம் comfortable ஆக இருக்கும்." என்றாள் உஷா. சற்றே ஆச்சரியமடைந்தான் ஆதவனும்.
" are you sure??? இது நான் உடுத்ததே. கழுவிய வேற t-shirt ஏதும் தரட்டா??"
" அதெல்லாம் பரவல்ல. எனக்கு இது தான் வேணும். தர முடியாதுன்னு சொல்லிருங்க ஆதவா" என்று முகத்தை திருப்பிக் கொள்ள, உடனே சென்று iron செய்திருந்த shirt யை அணிந்து, அவளிடம் வந்து கழற்றி இருந்த t-shirt யை கொடுத்தான் ஆதவன்.
அவளும் அதை உடுக்க, தன்னவள் தன் t-shirt யை அணிந்த சந்தோசத்தில் அவனும், ஆதவனின் t-shirt யை அணிந்த பெருமையில் அவளும் இருந்தாள்.
சற்றே முடியும் கலைந்து இருக்க, சீப்பை கொண்டு வந்து கொடுத்து அவனும் செல்லவே,
எங்கே செல்கிறான் என்று முடியை வாரியபடி உஷாவும் பார்க்க சமயலறையில் ஏதோ செய்து கொண்டு இருந்தான். ஓரிரு நிமிடத்தில் nescafe யை ஊற்றி உஷாவிற்கு நீட்ட, இதெல்லாம் உங்களுக்கு ஊத்த தெரியுமா??
"பெரிய வேலை ஒன்னுமில்ல உஷா. Nescafe packet ல sugar எல்லாம் இருக்கு, cup ஒன்டுல சுடுநீர் ஊற்றி packet யை போட்டால் சரி. ஓரிரு நிமிடங்களில் nescafe தயார்" என்று சொல்ல சிரித்தபடியே அவளும் குடித்துவிட்டு சாய்ந்தாள்.
KAMU SEDANG MEMBACA
காதல் வந்தால் சொல்லிவிடு (completed)
Romansaஇருமனங்கள் ஒன்று சேரும் அந்த அழகிய நாளில், குடும்பத்தின் விருப்பத்திற்காக திருமணத்தில் இணையும் கதாநாயகன் கதாநாயகி. காலமும் செல்ல ஒருவர் மேல் இன்னொருவருக்கு காதல் வருமோ? இல்லை விவாகரத்தில் வந்து முடியுமோ? என்று கதையுடன் பயணித்து அறிந்து கொள்வோம். #1...