💖 Episode - 19 💖

945 46 62
                                    


அடுத்த நாள் காலை அரவிந்த்துகுகு call செய்ய, வேலை செய்யல்ல. என்னடா என்றைக்கும் இல்லாதவாறு phone வேலை செய்யுது இல்ல என்று யோசிக்க, ஒருவேள phone off ஆகி இருக்கலாம் என்று நினைத்து காலேஜ் புறப்பட்டாள் உஷாவும். போகும்வழியில்லாம் call செய்து கொண்டே போனாள் அவளும். ஒருவேள என் calls alert இல் விழுந்திருக்குமல்லவா?? அதை பார்த்து அவன் கட்டாயம் பேசுவான். ஒருவேள புதிய ஊர்ல signal இல்லையோ என்னவோ?? என்று மனதை சமாளித்துக் கொண்டாள் உஷா.
அன்று ரேகாவின் birthday. மதியத்திற்கு Arun Cafe போவோம் அவள் பரிந்துரை செய்ய நண்பர்கள் சரி என்று சொல்ல புறப்பட்டனர் அவர்களுடன் உஷாவும் கூட. தன்னவன் வேலை செய்த இடமெல்லவா அது?? அவன் இருக்கும்போது போயிருந்தால் இதை விட நன்றாக இருந்து இருக்குமே என்று பேராசையும் கொண்டாள் உஷா.
சாப்பிட்டு விட்டு cashier இற்கு போக அங்கே போன நேரம் உஷாவின் பாடசாலை நண்பி ஒருத்தி வேலை செய்வதை காண, வெகுநாளைக்கு பிறகு அவளை காண உஷாவிற்கோ அவ்வளவு சந்தோசம். ரேகா, நண்பர்களிடம் பிறகு வருவதாக சொல்லி அனுப்பி விட்டு, இவ்வளவு காலடியில் இருந்து இன்றா உன்னை காண கிடைத்தது?? என்று கவலையும் பட்டாள். பின் கதைகள் பல கதைத்து விட்டு, staff பற்றிய கதையை இழுத்தாள் உஷா. அந்த நேரம் அரவிந்த் பற்றி கேட்டாள். "ஆனா அப்படி பேர்ல யாரும் இங்க வேல செய்யல்லன்னு" பதில் வர ஆந்தையாய் முழித்தாள் உஷா.
"இல்லடி இங்க தான் வேலை செய்ததா சொன்னாங்க."
"நா இங்க வேலைக்கு வந்து ஒரு வருடம் ஆகுதே."
" நேத்துல இருந்து யாரும் விலகிட்டு போனாங்களா???"
"இல்லடி அப்படி யாரும் விலகல்ல " என்று staff பற்றிய முழு விவரத்தையும் உஷாவிடம் காட்டினாள் அவள் நண்பி.
புகைப்படத்தோடு இருப்பதால் அவளுக்கு ஆளை இலகுவாக கண்டுகொள்ளலாமே என்று. ஆனால் அரவிந்த், அரவிந்த் சாடையில் கூட யாரும் இருக்கவில்லை.
" ஏன்டி இவ்வளவு அவன பத்தி விசாரிக்கிற??? "
" இல்லடி நண்பி ஒருத்திட boyfriend" என்று பொய் சொல்ல,
" இப்போ யாரையும் இலகுவாக நம்ப கூடாது உஷா. இப்போ நிறைய ஏமாத்துக்காரன்கள் இருக்காங்க" என்று சொன்னதும் உஷாவின் இதயம் ஒரு கணத்திற்கு நின்று போனது.
அவளிடம் விடைபெற்றவள், பாதையில் போகும் நேரமெல்லாம்
ஏன் அரவிந்த் என்கிட்ட பொய் சொல்லனும்? என்றபடியே தொலைபேசியை தட்டினாள். அப்போதும் வேலை செய்யவில்லை. அரவிந்த்துக்கு என்ன நடந்தது?? என்று யோசித்து காலேஜை அடைந்தாள்.

காதல் வந்தால் சொல்லிவிடு (completed) Onde histórias criam vida. Descubra agora