💖 Episode - 34 💖

874 45 41
                                    


அன்று இரவு நாளை போகப்போகும் பயணத்தை பற்றி உரையாடிக் கொண்டு இருக்க,
ஆதவனின் தொலைபேசியோ அலறியது.
" சொல்லுங்க சுரேஷ்.." என்று சொன்னபடி,
எழுந்து வெளியே செல்ல, இந்த நேரத்துல ஆதவனுக்கு ஏன் call பண்ணி இருக்கிறான் ?? என்று யோசித்துக் கொண்டு இருந்தாள் உஷா.

சிறிது நேரத்தில் வந்த ஆதவன்,
" I am extremely sorry guyz, நாளைக்கு நா கட்டாயம் மும்பாய் போகனும்"
"ஏன் ஆதவா?? ஏதாவது meeting ஆ??"
" ஆம் உஷா. எனக்கு ரொம்ப வேண்டப்பட்ட clients வெளிநாட்டுல வர்றாங்க. நா அவங்கள meet பண்ண வேண்டி இருக்கு. அதோட கம்பெனில எல்லா வேலைகளையும் check பண்ணிட்டு வர்ரேன். இன்னும் இரண்டு கிழமைல ஸ்னேஹா wedding வேற. பிறகு போகவும் முடியாதே. என்னால அசைய முடியாம இருக்குமே. "
" சரி அண்ணா. அப்போ trip?? " என்று ஸ்னேஹா கேள்வி எழுப்ப,
"அதானே.. அண்ணா இல்லாம நாங்க எப்படி போறது?? " என்றாள் சித்தியின் மகள்.
" பெரியவங்களுக்கு சித்தி எல்லாம் போறாங்க தானே ஸ்னேஹா. போய்ட்டு வாங்க. நா வர எப்படியும் இரண்டு நாள் ஆகும். நான் வந்ததன் பிறகு போக டைம் இருக்காதே. போக ரெடியான பயணத்த நீங்க போய் வாங்க. "
" ஆதவா, நானும் உங்க கூட மும்பாய் வாரேனே "
" உஷா, நா வீட்டுலயே இருக்க மாட்டேன் டா. நீ தனியா இருந்தா bore அடிக்குமே. நான் வேணும்னா வேற நாளைக்கு கூட்டிட்டு போறேனே. நாளைக்கு இவங்க கூட trip போய் வாடா" என்றான் ஆதவன்.
"அண்ணி, உங்களுக்காக தான் நாங்க போகவே ரெடியானோம். நீங்களும் எங்கள்ள கழற்றிவிட்டா எப்படி?? அம்மா சொந்தக்காரவங்க கிட்ட call பண்ணி வாரதாகவும் சொல்லிட்டாங்க. Please அண்ணி. எங்க கூட வாங்களே" என்று ஸ்னேஹா சொன்னாள்.
சரி என்று மனமின்றி உஷாவும் உடன்பட்டாள்.

அங்கே பேசிக் கொண்டிருந்த பொழுதெல்லாம் ஆதவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் உஷா.
சிறிது நேரத்தில் ஆதவனும் அறைக்குள் செல்ல,
" ஆதவா, கட்டாயம் போகனுமா?? வேற யாரையும் வைத்து client ஐ handle பண்ண முடியாதா??"
" கட்டாயம் போகனும்டா. உன் கூட ஊர் சுத்த எவ்வளவு ஆசைப்பட்டேன் தெரியுமா?? But I have to go. இல்ல உஷா என்ட அளவுக்கு யாரும் அவங்கள கூட perform பண்ண மாட்டாங்க."
" என்ன டைம்முக்கு போக போறீங்க?? "
" காலைல 7மணி மாதிரி "
" சரி " என்றவள் அறையை விட்டு வெளியேறி சமையலறைக்கு சென்றாள்.
" என்னம்மா, ஏதும் தேவையா??" என்று ஆதவனின் அம்மா கேட்க,
" நாளைக்கு காலைல ஆதவன் போறாரே. அதான் காலை, மதியம் சாப்பாடு சமைத்து கொடுக்க என்ன இருக்குதுன்னு பாக்குறேன்"
" சரிம்மா, அதற்கென்ன நா சமைக்கிறேன்மா"
" இல்ல அத்த. நானே சமைக்கிறேன்"
"சரிடா" என்று எங்கெங்கு சமைக்க தேவையான பொருட்கள் இருக்கு என்று உஷாவிடம் சொன்னார்.

காதல் வந்தால் சொல்லிவிடு (completed) Donde viven las historias. Descúbrelo ahora