"ஆதவா, அப்படி சொல்லாதீங்க. நா ஒன்னும் நடிக்கல. உங்கள உண்மையாவே விரும்புறேன்" என்று திரும்பி இருந்த ஆதவனை பிடித்து தன்னை பார்க்க செய்தாள். ஆனால் அவனோ உஷாவின் முகத்தை பார்க்காமல் வேறு எங்கோ பார்த்துக் கொண்டிருந்தான்.
" ஆதவா, உங்கள திருமணம் முடித்தது என் பெற்றோருக்காகவும், என் அக்காவின் வேண்டுகொளுகுகும் தான். எவ்வளவு அவங்க உங்கள பத்தி சொன்னாலும் என் காதுல விழல்ல. வலது காதால் கேட்டு இடது காதால் விட்டு விடுவேன். நான் உயிருக்கு உயிராய் அரவிந்த்தை விரும்பினேன். எல்லாரும் அவன் என்ன ஏமாத்தினதா சொல்லும்போது எல்லா ஆண்களும் அப்படி தான் நினைத்தேன். ஆண்கள்ட தேவ பெண்கள் மட்டும் தான் என்று நினைத்த எனக்கு நீ காட்டின பாசம் ஒன்னும் விளங்கல்ல.இப்படியே காலமும் போக அன்னைக்கு அம்மாவும், அக்காவும் வீட்டுக்கு வந்தாங்க. அந்த நேரம் தான் திவ்யா divorce paper யை என் lap ல வைத்திருந்தா. அத கண்டதும் எனக்கு என்னவோ போல இருந்தது. அதற்கு பின் தான் நீ காட்டிய பாசம் எல்லாவற்றையும் மீட்டிப் பார்த்தேன். அதற்கு பிறகு தான் யோசன கூடி தலைவலி பிடித்தது. டாக்டர கூட நீங்க கூட்டிட்டு வந்தீங்க. அவவ drop பண்ணிட்டு வரும்போது பக்கத்து aunty உங்களுக்கு advice பண்ணாங்க. அது உங்களுக்கு கோபத்த வரவழைத்தது. ஏன் என்னை மருந்து குடிக்க சொல்ல, நானும் முடியாதுன்னு சொல்ல, உங்களுக்கு என் மேல இன்னும் கோபமும் வந்து வாய்க்கு வந்த மாதிரி ஏசினீங்க. அந்த சொற்கள் என்ட மனச நல்ல hurt பண்ணிட்டு, அதனால தான் யோசிக்காம கையெழுத்து போட்டுட்டேன். ஆனா ஆதவா தினமும் ஏன் கையோப்பம் போட்டேன்னு மனதால வருந்துவேன். நீங்க அத கண்டா எப்படி react பண்வீங்கன்னும் பயந்து கொண்டே இருந்தேன். ஓரிரு தடவ எடுத்து கிழித்து வீச பார்த்தேன்
என் கெட்ட நேரத்துக்கு அதுவும் கிடைக்கல "" ஆதவா, அன்னைக்கு என்கிட்ட காசு கேட்டு பின்னால அவங்க வந்த நேரம் நீங்க சரியான நேரத்துக்கு வந்து எனக்காக ஒரு லட்சம் காசு கேட்டதும் எதுவும் பேசாமல் கொடுத்தீங்க. அந்த நேரம் என் மேல கொண்ட அன்பு விளங்க தொடங்கிய முதல் தருணம். அந்த Divorce paper இன் தயவால் உங்களின் நல்ல பக்கத்தை படிப்படியாக அறிந்து கொண்டேன். சற்றும் எதிர்ப்பார்க்காத மலேசியா tour. என் வாழ்க்கையவே திருப்பி போட்டது. காதல் என்ற தாவரம் என்னுள்ள செத்து போய் இருந்தாலும் உங்களது கரிசனையால் மீண்டும் தண்ணீர் ஊற்றப்பட, மெதுவாக தளிரவும் தொடங்கியது.
ESTÁS LEYENDO
காதல் வந்தால் சொல்லிவிடு (completed)
Romanceஇருமனங்கள் ஒன்று சேரும் அந்த அழகிய நாளில், குடும்பத்தின் விருப்பத்திற்காக திருமணத்தில் இணையும் கதாநாயகன் கதாநாயகி. காலமும் செல்ல ஒருவர் மேல் இன்னொருவருக்கு காதல் வருமோ? இல்லை விவாகரத்தில் வந்து முடியுமோ? என்று கதையுடன் பயணித்து அறிந்து கொள்வோம். #1...