💖 Episode - 32 💖

969 50 34
                                    


அன்றைய இரவு ஏன் நீண்டுவிடக் கூடாதா?? இல்ல உஷா தான் கெட்டகனவுகள் தினமும் காணத்தான் கூடாதா??? என்று ஆதவன் நினைக்க, நா ஏன் இவ்வளவு selfish ஆக இருக்கேன். இனி நல்ல கனவே அவளுக்கு வரட்டும் என்று மனதால் ஏங்கினான். உஷாவை மேலும் அணைத்துக் கொண்டு அவளது நெற்றியில் முத்தத்தை கொடுத்து, முழு இரவும் தன்னவளை பார்க்க வேண்டும் என்று நினைத்தாலும் அவனை அறியாமலே தூக்கமும் போனது.

காலையும் அழகாக மலரவே,
ஆதவன் கண்விழித்து பார்த்தான் என்னமோ பாரமா இருக்கே என்று. பார்த்தால் அவனது மேலில் ஒரு காலையும், ஒரு கையையும் போட்டு, அணைத்தபடி தூங்கியிருந்தாள் உஷா. தான் எழுந்தால் அவளும் எழுந்துவிடுவாளே என்று அவனும் பேசாமல் அவளை பார்த்துக் கொண்டிருக்க, சிறிது நேரத்தில் ஆதவனின் தொலைபேசி அலறும் சத்தத்திற்கு கண்களை கசக்கிக் கொண்டு கண்விழித்து பார்த்தாள் உஷா. தன் காலும், கையும் ஆதவன் மேல... போததற்கு ஆதவன் வேற தன்னை பார்த்துக் கொண்டிருக்கானே என்று திடுக்கென்று அவனை விட்டு விலகினாள்.
"ஆதவா, அது வந்து... எனக்கு.. தூக்கம் வரல்லயா... அதான்.. உங்க.. கிட்ட வந்து... தூங்கினேன்..." என்று தட்டுத்தடுமாறி சொல்ல, ஆதவனோ அவள் சொல்வதை இரசித்தபடி பார்த்துக் கொண்டு இருந்தான். அவனை பார்த்துக் கொண்டிருக்க முடியாத வெட்கத்தால் குளியலறைக்குள் நுழைந்தாள் உஷா.

காலையில் எழும்போது இருந்த சந்தோசம் நேற்றைய இரவு கனவை நினைக்கும் போது மறைந்து போவதை கண்ட உஷா, குளித்துவிட்டு நேற்று சித்தி காட்டிய கடவுள் அறைக்குள் சென்றாள்.
கண்களை மூடிக் கொண்டு,
"கடவுளே, please மீண்டும் அரவிந்த்தை என் வாழ்க்கைல்ல வர வைத்து விடாதே. நானும் ஆதவனும் நல்ல சந்தோசமா வாழனும். நீ தான் அதற்கு அருள் புரியவேண்டும். Please எங்க கிடைல்ல அரவிந்த்தை நுழைக்காதே. அவனால எனக்கோ, என் கணவருக்கோ எந்த தீங்கும் நடைபெறகூடாது" என்று மனதில் உள்ள எல்லா பாரத்தையும் கடவுளிடம் சொல்லும்போது கண்களிலிருந்து கண்ணீரும் வடிந்தது. கண்களை திறந்து பார்க்க, அவளது பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று பூவொன்று அவளது காலடியில் விழுந்தது.

காதல் வந்தால் சொல்லிவிடு (completed) Onde histórias criam vida. Descubra agora