புலம்பிக் கொண்டு, குளியலறைக்குள் புகுந்து brush பண்ணிக் கொண்டு,
தற்போதைய நிகழ்வை நினைத்துக் கொண்டு இருந்தாள் உஷா.
மாயை என்றால் பார்த்து கொண்டு மட்டும் தானே இருக்கும். ஆனா இந்த மாயை பேசியதே.. அப்படியென்றால் உண்மையாகவே ஆதவன் வந்துவிட்டானோ... ஆனா இன்னும் 2, 3 நாள்ள வருவதாக தானே சொன்னாரு... என்று அவசரமாக முகத்தையும் கழுவிக் கொண்டு, towel ஆல் முகத்தை துடைத்துக் கொண்டு வந்துப் பார்த்தாள் உஷா.
அதே இடத்தில் நின்று கொண்டிருந்தான் ஆதவன்.அருகில் சென்று, ஆதவனை தொட்டுப் பார்த்தாள். அது அக்கணத்தில் மறையாமல் இருந்துக் கொண்டிருக்க, மாறாக கைகள் உண்மையென உணர்ந்தன. ஆதவனை கிள்ள,
"உஷா... ஏன்டி இந்த கொலைவெறி?? " என்று கத்த,
" நேத்து என்ன நிம்மதியா இருக்கவே விடல்ல. என் முன்ன வந்து வந்து ஏமாத்தின. நானும் எத்தன தடவ ஏமாந்தேன் தெரியுமா?? அதான் இது.." என்று சிரித்தபடியே சொல்லி ஆதவனை கட்டியணைத்தாள் உஷா.விடவே மனமில்லாமல் இருந்து கொண்டிருந்தனர்.
" என்ன மேடம், இன்னைக்கு full ஆ இப்படியே இருக்க ஐடியாவோ? "
" ஆம்.. ஏன்??? உங்களுக்கு வேறாவது வேலை இருக்கா?? " என்று தலையை உயர்த்தி கேட்டாள் உஷா.
" வேல ஒன்னுமில்லடா. நீ coffee இன்னும் குடிக்கல, சாப்பிடவுமில்ல. இன்னைக்கு evening க்கு again Mumbai போகனும்" என்று சொல்ல,
" என்ன again போகனுமா??? " என்று கவலையில் கேட்டாள் பேதை.
" ஆம் தங்கமே.. "
" ஏன்டா வந்த??? "
" உன்ன பாக்கனும்போல அதான் வந்தேன்"
" ம்ம்ம். என்ன மறுபடியும் ஏத்திவிட்டு miss பண்ண வைக்க வந்தீங்களா?? போங்க "
என்று அவனது கட்டியணைப்பில் இருந்து ரோசமாக சென்ற அவளை இழுத்து,
" உஷா "
" என்ன??? "
" மும்பாயிற்கு போகவேணும்னு சொன்னேன். ஆனா தனிய இல்லயே.. என் மனைவி கூட "
" என்ன??? நானுமா ??? "
" ஆம்டா. நீயும் தான் "
" wowwwwwww. Joly joly "
" ஏன்டி இவ்வளவு குதிக்கிற?? தப்பாச்சே..."
" அது வந்து.... அம்மா அப்பா திவ்யாவ பாக்குறதற்கு தான் "
" அப்படியா?? எனக்கே ஏதும்....?? "
" புருஷா, சும்ம கற்பன எல்லாம் வளர்த்து கொள்ளகூடாது. சரி நா ரெடியாகுறேன். ஸ்னேஹா கல்யாணத்துக்கு சாரியும் எடுக்கனும் ஆதவா, உங்களுக்கும்.. எப்ப இங்க திரும்பி வாரது? "
" இன்று எப்படியும் போக நைட் ஆகும். Shopping எல்லாம் முடிந்து, உன்ட அம்மா, அப்பா, அக்கா எல்லாம் பார்த்துட்டு நாளைக்கு evening ஏ வரலாமே"
" என்னது??? ஏலா ஏலா ஆதவா.. அடுத்த நாள் பகல் மாதிரி வருவோமே. Shopping செய்து tired ஆக இருக்குமே " என்றாள் உஷா.
" சரிடா, உன் விருப்பம் " என்றவன், அப்போ Plan யை cancle பண்ணி வேணுமே, போற நேரம் set ஆகாது. வரும்போது set பண்ணிரலாம்.
உஷா, a suprise waiting for you என்று மனதால் நினைத்துக் கொண்டு, ஒரு call எடுத்துட்டு வாரேன் என்று விடைபெற்று,
" hello, நா ஆதவன்.
........................
அந்த table booking cancle பண்ணிருங்க. அதற்கு அடுத்த நாளிற்கு arrange பண்ணிருங்க.
......................
" சரி design ஐ Whatsapp பண்ணிவிடுகிறேன். "
என்று அழைப்பை துண்டித்தவன், அறைக்குள் நுழைய உஷா காபியை குடித்துக் கொண்டிருந்தாள். பின்னர் சரி வா போகலாம் என்று ஆதவன் உஷாவையையும் அழைத்துக் கொண்டு ஹாலிற்கு சென்றான்.
YOU ARE READING
காதல் வந்தால் சொல்லிவிடு (completed)
Romanceஇருமனங்கள் ஒன்று சேரும் அந்த அழகிய நாளில், குடும்பத்தின் விருப்பத்திற்காக திருமணத்தில் இணையும் கதாநாயகன் கதாநாயகி. காலமும் செல்ல ஒருவர் மேல் இன்னொருவருக்கு காதல் வருமோ? இல்லை விவாகரத்தில் வந்து முடியுமோ? என்று கதையுடன் பயணித்து அறிந்து கொள்வோம். #1...