அந்த நேரத்தில் உஷாவின் தொலைபேசி அலறிக் கொண்டு இருந்தது. எடுத்துப்பார்க்க, "home"
பேசு என்று ரேகா சொல்ல, அவளை பார்த்துவிட்டு, காதில் வைத்தாள்.
"மகள், எங்க இருக்க??? டிரைவர் hospital க்கு வந்தன்னு சொன்னாரு. என்ன நடந்த?? " என்று தாய் கேட்க,
"அம்மா எனக்கு ஒன்னுமில்ல. எனக்கு தெரிந்த ஒருவருக்கு அடிபட்டு இருந்தது. அதான் எங்க கார்ல கூட்டிட்டு வந்தேன்மா"
"சரி உஷா, மிச்சம் லேட்டாகாம வீட்டுக்கு வத்துரும்மா. Stay safe"
"சரி" என்று அழைப்பை துண்டித்தாள் உஷா.கடிகார முள்ளும் ஏட்டிக்கு போட்டிக்காக சுழன்றுக் கொண்டிருந்தது. மாலை 5.55 இருக்கும் அனைவரையும் வெளியேற சொல்லிக் கொண்டு பெரிய தாதி வந்தார்.
"உஷா, நாம போகலாம்" என்று ரேகா அவளை அழைக்க,
"முடியாது, நா அரவிந்த்தை விட்டுட்டு வர மாட்டேன்." என்று அவளது கையை உதறினாள்.
"என்ன இங்க செய்ரீங்க?? காலைல 6 மணில இருந்து 8 மணிக்கு இடைல்ல பார்க்கலாம். இப்போதைக்கு போங்க." என்று பெரிய தாதி சொன்னார். டாக்டரோடு பேசிட்டு போறேன் என்று சொன்னாலும் தாதியோ சம்மதிக்கவில்லை. அதனை மீறி எதுவும் செய்ய முடியாமல் ரேகாவுடன் போய் காரில் ஏறினாள் உஷா.
பேச்சு மூச்சு எதுவுமின்றி பயணமும் நகர்ந்தது. ரேகாவை விட்டுவிட்டு வீட்டை அடைந்தாள் உஷா.கதவை திறந்து உள்ளே வர,
"உஷா, வாம்மா" என்று தாயார் அவளுக்காக காத்திருந்தார்.
அவளை கண்டதும்,
தாய் ஓடி வந்து "உஷா, என்னடி இவ்வளவு இரத்தம்??? உனக்கு ஏதும் இல்லையே" என்று கைகளை பிடித்து காயங்களை ஆராய்ந்தார்.
"இல்லம்மா எனக்கு ஏதுமில்ல, காலேஜ் பக்கத்துல இருக்கிற பஸ் ஸ்டாண்ட்ல என்னமோ கலகலப்பு. நிறைய ஆக்களுக்கு காயம். அதான் நானும் எனக்கு தெரிந்த ஒருவருக்கும் காயம். கூட்டிட்டு போனேன்மா. அவர்ட இரத்தம்"
" இப்போ நல்லமா?? "
" என்னமோ தெரியல மா, hospital நேரம் முடிந்ததுன்னு எங்கள அனுப்பிட்டாங்க " என்று தாயாரிடம் சொல்லிவிட," நீயும் fresh ஆகிவிட்டு இரவு உணவு சாப்பிட வாம்மா. முகமும் ரொம்ப டல்லா இருக்கு. ஒன்னும் யோசிக்காதேம்மா" என்று அவளது தலையை தடவி விட்டார்.
ВЫ ЧИТАЕТЕ
காதல் வந்தால் சொல்லிவிடு (completed)
Любовные романыஇருமனங்கள் ஒன்று சேரும் அந்த அழகிய நாளில், குடும்பத்தின் விருப்பத்திற்காக திருமணத்தில் இணையும் கதாநாயகன் கதாநாயகி. காலமும் செல்ல ஒருவர் மேல் இன்னொருவருக்கு காதல் வருமோ? இல்லை விவாகரத்தில் வந்து முடியுமோ? என்று கதையுடன் பயணித்து அறிந்து கொள்வோம். #1...