அரவிந்த் உஷாவை கூப்பிட கூப்பிட கேட்காதது போலவே சென்றாள் அவளும்.
" sorry, அரவிந்த். இன்னைக்கு கோவிற்கு வந்தீங்க அன்று call அ cut செய்ததால தானே. இன்னைக்கு இப்படி போவதும் இன்னைக்கு இரவுக்கு ஏதாவது நல்ல முடிவு சொல்வீங்கன்னு தான். உங்களுக்கு என்ன அப்படி reject பண்ண முடியாது அரவிந்த்" என்று நினைத்தபடியே சென்றாள்.
காலேஜில் மெதுவாக சென்று அனைவர்களுடனும் சேர்ந்து கொண்டாள். மனதில் ஒரே அரவிந்த் பற்றிய எண்ணம் தான் ஒடிக் கொண்டு இருந்தது. தொலைபேசியை அடிக்கடி பார்த்தாலும் எந்தவொரு பயனும் இருக்கவில்லை.
இன்று இரவே அக்கா கிட்ட அரவிந்த் பற்றி பேசனும். எப்படியாவது விருப்பமாக்கி கொள்ளனும் என்றெல்லாம் பகல் கனவு கண்டாள் உஷா.காலேஜ் விட்டு பார்க்க, அக்கா hall இல் அமர்ந்து TV பார்த்து கொண்டு இருந்தாள். வீட்டை சுற்றி பார்த்துவிட்டு,
"அக்கா, அம்மா அப்பா எங்கே???" என்று கேட்க,
"உஷா வந்துட்டியா?? உன்ன காணல்ல. சீனிவாசன் uncle இறந்துட்டாருன்னு அம்மா அப்பா போய்டாங்க. உன்ன கூட்டிட்டு வர சொன்னாங்க" என்று சொன்னதும், செய்வதறியாது திகைத்தாள் உஷா.
அன்று தான் அவரைக் கண்டேனே, நல்ல பேசினார், நல்ல பழகினாரு என்று நினைக்க, தந்தைக்கு அவர் கேட்ட வேண்டுகோளை நினைக்க மனதில் பக்கென்று இருந்தது.
" உஷா, உஷா " என்று அக்கா அவளை தட்டும்போது தான் அவளும் உலகிற்கு வந்தாள்.
இளம் நிறத்தில் சுடிதாரில் தயாராகி வரவே, அக்காவுடன் சேர்ந்து அவளும் சென்றாள். உள்ளே நுழைய ஆதவனின் தங்கை உஷாவை கண்டு கட்டிப்பிடித்து அழத்தொடங்கினாள். இவ்வளவு ஆட்களும் இருந்தும் ஏன் தன்னிடம் ஆறுதல் தேடுகிறாள் என்று நினைக்க சற்றே ஆச்சரியத்தை உண்டாக்கியது. ஒருவேளை அண்ணி என்றோ... என்று அவளை இன்னும் பயமுறுத்தியது.சடங்குகள் முடிந்து எல்லாரும் கிளம்பவே, "ஆதவன், நாங்க போய் வாரோம். அம்மா தங்கைய கவனமா பார்த்துக்கோங்க" என்று உஷாவின் தந்தை சொல்லவும் தன் பார்வையை சற்று அவனை நோக்கி திருப்பினாள் உஷா. ஆனால் முகத்தை தொங்கப் போட்டுக்கொண்டு அவன் அழுது கொண்டு இருந்ததால் ஒழுங்காக அவனது முகம் விளங்கவில்லை. மௌன பயணத்தில் வீட்டை வந்து அடைந்தனர் உஷாவும், உஷாவின் குடும்பத்தினரும்.
أنت تقرأ
காதல் வந்தால் சொல்லிவிடு (completed)
عاطفيةஇருமனங்கள் ஒன்று சேரும் அந்த அழகிய நாளில், குடும்பத்தின் விருப்பத்திற்காக திருமணத்தில் இணையும் கதாநாயகன் கதாநாயகி. காலமும் செல்ல ஒருவர் மேல் இன்னொருவருக்கு காதல் வருமோ? இல்லை விவாகரத்தில் வந்து முடியுமோ? என்று கதையுடன் பயணித்து அறிந்து கொள்வோம். #1...