விமானத்தை அடைந்தனர் உஷாவும் ஆதவனும். இதுவரை வெளிநாட்டிலிருந்து வருபவர்களை வரவேற்பதும், வெளிநாட்டுக்கு விடுவதற்காகவுமே உஷா சென்று இருக்கிறாள். அவ்வாறு சென்றாலும் ஒரு கட்டத்தின் மேலே செல்லமுடியாதே ஆனால் இன்று அவள் சென்றாள் அதுவும் ஆதவன் உடன். விமான நிலையத்தில் தேவையான செக்கிங் நடந்து முடிந்த பின் boarding க்கு வர, அவர்களை ஏற்றிச் செல்வதற்கு ஒரு பேருந்தும் வந்தது. வானில் பறந்து செல்லும் விமானங்கள் தான் பயணிக்கும் பேரூந்தில் அருகிலே காணப்படுவது சற்றே வித்தியாசமாகவே இருந்தது. தங்களை போல பல பயணிகள் விமானத்தில் ஏறுவதும், மற்றைய விமானத்திலிருந்து சிலர் இறங்குவதுமாகவும், தொலைவில் ஓர் விமானம் ஓடுபாதையில் நகர்ந்து கொண்டு இருப்பதும் சற்றே வித்தியாசமான அனுபவமாக இருந்தது அவளுக்கு. ஆனால் ஆதவனுக்கோ இது பழக்கப்பட்ட பயணமாகவே திகழ்ந்தது. நிறைய வெளிநாட்டு conferences சென்று பழக்கப்பட்டவனல்லவா?? பயணிக்க வேண்டிய வெள்ளை நீளமான விமானம் அருகே பேருந்தும் நிறுத்தப்பட்டது. பின்னர் Air hostess களின் வரவேற்பின் மத்தியில் தங்களது சீட்டுகளை தேடத் தொடங்கினர். உஷாவும் ஆதவனும் தேட, ஆதவனின் சீட்டோ உஷாவின் சீட்டுக்கு நான்கைந்து சீட்கள் பின்னால் இருந்தன. உஷாவின் இருப்புக்கு அடுத்து யன்னலோர பக்கத்தில் ஓர் நடுத்தர வயது ஆணுருவன் அமர்ந்திருந்தான். ஆதவனுக்கு பக்கத்திலும் ஓர் ஆண். உஷாவின் டிக்கெட் நேற்று தான் பதிவு செய்தமையால் தான் ஆதவனுக்கு அருகே அமர முடியாமல் போனது.ஆதவனுக்கு உஷாவை அங்கே அமர வைக்க மனமே இல்லை. உஷாவோ இல்ல பரவல்ல ஆதவா என்று சொல்லிக் கொண்டு இருந்தாள். அவளது முதல் விமானப்பயணம் வேற. என் அருகில் இருந்தா நல்லா இருக்குமே. Television ல போட்ற safety guidance எல்லாம் பார்த்து பயப்படுவாளே என்று நினைத்தவன், உஷாவின் பக்கத்து நபருடன் பேசினாலும் தோல்வியே கிட்டியது. ஆதவனைப்போல தானும் யன்னலோர சீட்டை விட்டுக்கொடுக்கமாட்டேன். தன்னுடைய முதல் பயணமும் என்றான். பிறகு தன் பக்கத்து சீட் நபரிடம் தன் மனைவி முதல்பயணம். அது இது என்று ஒருவாறு பேசி சம்மதிக்க வைத்து உஷாவை தன் அருகில் அமர வைத்து பெருமூச்சு விட்டான் ஆதவன் தனக்கு பிடித்தமான யன்னலோர சீட்டையும் தியாகித்தவாறு.
ŞİMDİ OKUDUĞUN
காதல் வந்தால் சொல்லிவிடு (completed)
Romantizmஇருமனங்கள் ஒன்று சேரும் அந்த அழகிய நாளில், குடும்பத்தின் விருப்பத்திற்காக திருமணத்தில் இணையும் கதாநாயகன் கதாநாயகி. காலமும் செல்ல ஒருவர் மேல் இன்னொருவருக்கு காதல் வருமோ? இல்லை விவாகரத்தில் வந்து முடியுமோ? என்று கதையுடன் பயணித்து அறிந்து கொள்வோம். #1...