💖 Episode - 04 💖

1.8K 57 27
                                    


அவனும் shawl யை இழுக்க, தன் மானத்தை காக்க உஷாவும் இழுத்தாள். விளைவாக உஷா சுழன்று விழப்போக, அவளை ஓர் வலிய கரம் பிடித்தது.
"யார்டா நீ?? எங்ககுள்ள வந்து எங்கட காரியத்த கெடுக்குற அளவு தைரியசாலி??" என்று ஒருவன் கேட்க,
" I am Mr. Aadhawan. உஷாட  கணவன்" என்று சொல்லும்போது தான் உஷாவும் தன்னை பிடித்தது யார் என்று தெரிந்து கொண்டாள். ஆதவனை அண்ணாந்து பார்க்க, அழுதழுத கண்களோடு பயத்தால் விறைத்து போயிருந்ந முகத்தை காண ஆத்திரமும் அவனுக்கோ பொங்கியது.

" நீ கார்க்குள்ள போய் இரு " என்று உஷாவிடம் சொல்லிவிட்டு, அந்த இருவரையும் நோக்கி சென்றான்.
அவர்களிடமிருந்த உஷாவின் shawl ஐ பறித்து எடுத்தவன், அவர்களுக்கு அடிக்க கையை ஓங்கும்போது அதில் ஒருவன் கையை பிடித்து,
" sir, நமக்குள்ள எந்த சண்டையும் தேவைல்ல. உஷா எங்க கிட்ட ஒரு லட்சம் பணம் வாங்கினா, அத இன்னம் திருப்பி தராம எங்க கிட்ட இருந்து தப்பித்துட்டு இருந்தா. அதான் இன்னைக்கு.." என்று சொல்ல,

"உஷா" என்று ஆதவன் கத்த, அவனிடம் ஓடி வந்து ஆதவனின் முதுகில் மறைந்தபடி இருந்தாள்.
" உஷா, இவங்க சொல்றது உண்மையா??? நீ இவங்க கிட்ட ஒரு லட்சம் காசு எடுத்தியா?? " என்று கேட்டபடி அவளது shawl யை கொடுத்தான் ஆதவன்.
அதை பெற்று போட்டுக்கொண்டவள், ஆம் என்று தலையாட்டினாள்.

அவனிடமிருந்து கையை விடுவித்தவன், காரை நோக்கி வேகமாக செல்ல, உஷாவும் எதற்கு? ஏன்? என்று பார்வையால் ஆராய்ந்து கொண்டு இருந்தாள் ஏன் அந்த இருவர்களும் கூடவே.
கார் கதவை திறந்து, எதனையோ குனிந்து எடுத்தவன், காரின் மேற்பரப்பில் ஏதோ காகிதங்களில் எழுதுவதை கண்டனர். சில கணத்தில் அவ்விடம் வந்தவன்,
"இந்தா அந்த ஒரு லட்சத்துக்கு ஐம்பதாயிரம் ரூபாவுக்கான cash. நீங்க கேட்ட ஒரு லட்சத்துக்கு கூடுதலா ஐம்பதாயிரமும் தந்து இருக்கிறேன். இனி உஷா பின்னாடி அலைந்தா நடக்குறதே வேற. புரிதா??? எந்த பொண்ட மானத்த இப்படி ரோட்ல எடுக்க கூடாது. இனி உங்களுக்கும் அவளுக்கும் எந்த சம்பந்தமும் இருக்க கூடாது" என்றவாறு cash தாளை கொடுத்தான்.

காதல் வந்தால் சொல்லிவிடு (completed) Où les histoires vivent. Découvrez maintenant