💖 Episode - 29 💖

904 47 54
                                    

"நா உஷா, உங்களுக்கு என்ன தெரியாம இருக்கலாம். ஆனா எனக்கு உங்கள ரொம்ப நல்லா தெரியுமே" என்று உஷா சொல்லும்போது,
மேகலா அரவிந்த்தை பார்க்க,
அவனோ மௌனமாக இருப்பதை கண்டு வியந்தாள். இதுவர அவன அப்படி இருந்து பார்த்ததே இல்லையே.

" மேகலா, நீங்க இருந்த வீட்ட நாங்க எடுக்கிறது பத்தி ஓரிரு தடவ நா உங்க கணவர சந்தித்து இருக்கேன். அந்த நேரம் என் husband வெளிநாட்டுல இருந்தாரு. அப்படி பழக்கம். இல்லையா அரவிந்த்?? " என்று கேள்வியும் கேட்க, வராத புன்முறுவலை அரவிந்த் வர வைக்க,
எப்படி தெரியும் என்று சொன்னபோது தான் மேகலாவின் முகமும் சற்றே விடிந்தது.
அவள் தன் கணவனான அரவிந்த்தை சந்தேகமாக பார்ப்பதை கண்டே உஷா அப்படி அவளை சமாதானப்படுத்த சொன்னாள்.

" என்ன சேர் bills எல்லாம் இருக்கா??" என்று கேட்க,
" ஆம் " என்று சில கணத்தில் கொண்டு வந்து கொடுத்தான். பின் ஏதாவது குடிக்க தரப்போக,
" வேண்டாம்" என்று இருவரும் சொல்ல,
" வீட்டுக்கு வந்த ஆக்களுக்கு ஒன்னும் குடிக்காம அனுப்புறது சரில்ல உஷா. நா அவசரமா போய் ஊற்றிட்டு வாரேன். நீங்க அரவிந்த் கூட பேசிட்டு இருங்க" என்று மேகலாவும் சென்றாள். எவ்வளவு சொல்லியும் அவளோ கேட்கவில்லை.

" இவர் தான் ஆதவன். ஆதவன் company ல CEO வாக இருக்கேன். இவர் தான் ஆசை கணவன்" என்று உஷா introduce செய்ய,
அரவிந்த் கை கொடுக்க, ஆதவனும் கொடுத்தான். ஆதவனுக்கு தன் மனைவியின் உணர்வுகளோடு விளையாடியவனின் கையை முறிக்க வேண்டும் போலவும் இருந்தது.
மேகலா வரும்வரை வராத பேச்சுகளை பேசியபடி இருக்க, உஷா மறந்தாவது அரவிந்த்தை பார்க்கவில்லை. பார்க்க வேண்டும் என்று ஒரு கணமும் நினைக்கவுமில்லை.
தேநீரும் வந்துவிட, தேநீரை குடித்து விட்டு,
"மேகலா கவனமா இருங்க. Happy to meet you " என்று கிளம்பியவள்,
ஆதவனிடம் கொண்டு வர சொன்ன அந்த சிவப்பு box இல் இருந்த மோதிரத்தை அரவிந்த்திடம் கொடுத்தாள்.

அதைக் கண்ட மேகலா "உங்களுக்கு இது எங்களால உஷா?? எவ்வளவு தேடினேன் இத" என்று கேட்க, அரவிந்த்தின் முகமோ வெளுத்திருந்தது.
" மேகலா, நாங்க வீட்ட துப்புரவு செய்யும்போது கண்டு எடுத்தேன். அதான் கவனமா box ல போட்டு பாதுகாத்தேன்" என்று உஷா சொல்ல,
" அரவிந்த், எத்தன நாள் இத தேடிப்பேனே. நீங்க கூட சொன்னீங்க கிடைக்க வேண்டும் என்று இருந்தால் அது எப்படியாவது கட்டாயம் கிடைக்கும்னு" என்று மனைவி மேகலா உணர்வுபூர்வமாக சொல்ல,
அரவிந்த் வாயிலிருந்து ஒரு சொல்லுமே வரவில்லை.
" உங்க கணவர் சொன்னது சரி தான். சரிடா நாங்க போய் வர்ரோம். "
" thank you so much உஷா. இது என் birthday க்கு ஆசையா என் கணவன் வாங்கி தந்தது. இது இல்லாம போனதும் எவ்வளவு துடித்து போனேன் தெரியுமா??"
" சரி இனி worry பண்ண தேவல்லயே. சந்தோசமா இருமா" என்று சொல்லிவிட்டு சென்றாள்.
" அவங்கள கேர்ட் கிட்ட போய் விடுங்க " என்று சென்றாள் மேகலா.
அவளது சொற்படி, அவர்களின் பின்னால் போனான் அரவிந்த். தீடீரென்று திரும்பிய உஷா கோலரால் இழுத்து,
" டேய், நீ எல்லாம் ஒரு மனுசனா??? என் life ல உன்ன மாதிரி ஒருத்தன ஏன் சந்தித்தேன்னு வருந்துர்ரேன். உன்ன கண்டதும் கத்தியால குத்தி இங்கயே கொன்று இருக்கனும். ஆனா உன்ட wife யை பார்த்ததும் பாவமா இருந்தது. நீ எனக்கு செய்ததுக்கு பழிவாங்க வேண்டும்னு இருந்தா உன் மனைவி முன்னால என்னையும் உன்னையும் பத்தி எல்லாம் சொல்லி இருப்பேன். அதோட அவளும் உன்ன விட்டுட்டு போய்ருவா. தனி ஆளா அவ பிள்ளைய வளர்த்து எடுக்கனும். இதுமாதிரி நா என் லைப்ல நிறையவே கண்டு இருக்கேன். அதனால அந்த பிள்ளைக்கும் ஒரு தகப்பனையும், மேகலாவிற்கு கணவனையும் இழக்க வைக்கல. நானும் ஒரு பொண்ணே. நா இன்னொரு பொண்ணுட வாழ்க்கைய கனவுலயும் நாசமாக்க மாட்டேன்.
உன்ன பார்க்க பார்க்க அருவருப்பா இருக்கு. கன்னம் இரண்டுக்கும் பளார்ன்னு அடிக்கனும் போல இருக்கு. ஆனா என் கை உன்ன தொட்ரதும் கொதிக்கிற நெருப்புல கைல வைக்கிறமாதிரி இருக்கும்.

காதல் வந்தால் சொல்லிவிடு (completed) Donde viven las historias. Descúbrelo ahora