💖 Episode - 20 💖

1K 52 61
                                    


"ஆதவா, அரவிந்த் மேல எனக்கு இருந்த காதல் இப்போ மரத்துபோய்விட்டது. தீடீரன்று ஒருவன மறக்குறது லேசானதா இருக்கல. காதலிக்கிறத ஒரேடியா நிப்பாட்டவும் ரொம்ப கஷ்டப்பட்டேனும் கூட. அதான் பல தடவை உங்கட மனசு நோகுறமாதிரி கல்யாணம் முடிந்ததும் உங்க கூட நடந்து கொண்டேன். என்ன மன்னித்து விடுங்க. இதற்கு முன்பு அவன் திரும்பி வருவான்னு நம்பிக்க இருந்தது ஆதவா. இப்போ வர மாட்டான்னு நம்பிக்க இருக்குது. வரவும் தேவையில்ல. ஆனா.. " என்று அவள் இழுக்க,
ஆனா என்ன சொல்வாள் என்று நினைக்க, ஆதவனுக்கே மூச்சே நின்றுவிடும் போல இருந்தது.
" சொல்லு உஷா. என்னது???? "
" அவன ஒரு தடவ காணனும். அவனுக்கு உண்மையாகவே என்ன நடந்ததுன்னு அறிந்து கொள்ள வேணும்"
" பிறகு...??? "
" அவ்வளவு தான் ஆதவா. என் பாதைல நா போய் கொண்டு இருப்பேன். மீண்டும் அவன என் வாழ்க்கையில்ல நுழைய விடமாட்டேன். ஆனா என்னாலே இதுவர கண்டுபிடிக்க முடியல்ல."
" என் நண்பனொருத்தன் பொலிஸ் ஆபிசர் ஆக work பண்றான். அவன்கிட்ட கேட்டுப் பார்க்கலாமே" என்றான் ஆதவன்.
" சரி ஆதவா " என்று சிறு புன்னகை உதிர்த்தாள் அவளும்.
"உன் கதைய கேட்டதால especial சாப்பாடும் ஆறிவிட்டது. வா சாப்பிடலாம்" என்று ஆதவன் கூப்பிட, சரி என்று இருவரும் சேர்ந்து உண்டனர்.
ஆதவன் உஷாவின் பழைய கதையை மறக்கவைத்து சிரித்து பேசியதன் விளைவாக ஆதவனிற்கு தீடீரென்று புரைகேறியது.
கண்களில் இருந்தும் கண்ணீர் துளிகளுடன் அவன் இரும, உஷா இருக்கையில் இருந்து எழுந்து வந்து, உச்சி தலையில் சற்று ஊதிவிட்டு தடவி விட்டு, அவன் முதுகிலும் தேய்த்து விட்டாள்.  தண்ணீரை நிரப்பி கிளாஸை ஆதவனுக்கும் கொடுத்தான். இன்னும் இன்னும் அவளது அக்கறையிலும் சற்றே நனைய தோன்றியது ஆதவனுக்கு இவ்வளவு நேரம் சொன்ன கதையில் அரவிந்த்தின் காதலி என்பதையும் மறக்காமலே.

பின், cold drink யை கையில் எடுத்து பால்கனியில் இருந்து இரவு வானத்தையும், இரவு நேர பாதையில் வாகனங்களின் வெளிச்சமும், கட்டிடங்களின் அழகை இரசித்துக் கொண்டிருந்தபடியே பருகினர் இருவரும். அப்போது எதிர்ச்சையாக உஷாவை பார்த்தான் ஆதவன்.
நிலாவின் வெளிச்சத்தில் அவளது முகத்தின் பிரகாசமும், கூந்தலில் வளைவு நெளிவுகளும் பார்த்து சற்று மனதை பறிகொடுத்தான் ஆதவன்.
"என்னமோ தெரியலடி, எத்தனையோ பெண்கள காலேஜ்ல, ஆபிஸ்ல பார்த்து இருக்கேன். ஆனா அவங்கள மறுபடியும் பார்க்கனும்னு தோனாது. ஆனா உன்னை மட்டும் பார்க்க தோனுது. ஏன் கையில் என் பெயரை வெட்டிக் கொண்டு வந்தவளும் நினைவுக்கு வந்து போனாள். ஆபிஸ்ல பின்னால் சுத்தும் அந்த பொண்ணும் கூட. அப்பா அம்மா பார்த்து தருபவளை தான் நான் மனைவியாக்கி காதலிக்க வேண்டும் என்று முன்பிலிருந்தே எனக்கு ஆசை. இந்த காதல் கீதல் எல்லாம் செட் ஆகாது. எனக்கு பிடித்தால் பெற்றோருக்கு பிடிக்காது. இது தேவையா?? என்று தான் என்னவள் வரும்வரை காத்துக்கொண்டு இருந்தேன். நீயும் வந்தாய். ஆனா என் காதலை கொட்டித் தீர்க்க நீயும் விடல்ல. அதற்கும் அர்த்தம் இப்போது தானே விளங்குது. Past is past உஷா. அரவிந்த் பற்றி நீ பேசும்போது உன் முகத்துல இருந்த வெறுப்ப கண்டேன். நீ நினைக்கிற ஆண்வர்க்கத்தம் எல்லாம் ஒன்று போலன்னு ஆனா நான் அப்படிப்பட்டவன் இல்ல. காதல்ல நீ பட்ட காயத்துக்கு நா மருந்துப் போட்டு உன்ன மீண்டும் என்னை காதலிக்க வைப்பேன்டி" என்று நினைத்து கொண்டு இருக்கும்போது, ஆதவனின் முன்னால சொடக்கு போட்டாள் உஷா.
" என்ன இப்படி ஒரு பலம் யோசன?? "
அப்போது தான் இந்த உலகிற்கு வந்தவன்,
" ஒன்னுமில்ல உஷா. சும்மா தான் "
" ஏன் உங்களுக்கும் ஏதாவது???? " என்று இழுக்க,
" ஐயோ எனக்கு அப்படி ஒன்னுமில்ல. நா யாரையும் லவ் பண்ணல உஷா"
"சரி ஆதவா, இவ்வளவு handsome ஆக இருக்கீங்க. உங்களுக்கு இல்லன்னு சொல்றத நம்ப கொஞ்சம் doubts தான்" என்று கண்ணடித்து அவளும் சொல்ல,
" உன் மேல promise டி" என்று ஆதவன் உஷாவின் தலையின் மேல் கைவைக்க, இரு கண்களும் உதடுகள் பேசாத ஏதோ பாஷையில் பேசிக் கொண்டன. அவ்வாறு இருக்க, ஆதவனின் தொலைபேசியில் அலறவே இருவரும் இவ்வுலகிற்கு வந்தனர்.

காதல் வந்தால் சொல்லிவிடு (completed) Donde viven las historias. Descúbrelo ahora